கொசுத் தொல்லையைப் போக்க உதவும் டிப்ஸ்!

By Marimuthu M
Apr 14, 2024

Hindustan Times
Tamil

புதினாவின் வாசம் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டது. இதனை ஒரு கிண்ணத்தில் போட்டு வைக்கலாம். புதினா எண்ணெயை கொசு இருக்கும் இடத்தில் தெளித்து கூட கொசுவை விரட்டலாம். 

கொசுக்கள் வரும் இடங்களில் கற்பூரத்தைக் கொளுத்தலாம். இல்லையேல்,  ஒரு சிறு கிண்ணத்தில் நீர் ஊற்றி அதில் கற்பூரத்தைப் போட்டு வைக்கலாம். 

 பூண்டினை நீரில் சூடாக்கிவிட்டு, அந்த நீரை கொசுக்கள் வரும் இடங்களில் தெளித்துவிட, அந்த வாசனைக்கு கொசுக்கள் வராது.

துளசி இலைகளை நசுக்கி கொசுக்கள் வரும் இடங்களில் வைக்க, அந்த இடத்தில் இருந்து கொசுக்கள் வெளியேறி விடும். 

கொசுக்கள் பெருகும் நீர் நிலை, தொட்டிகளில் காபி தூளை தூவி விட்டால் கொசுக்கள் பெருகுவது மட்டுப்படும். 

கொசுக்கள் வரும் இடங்களில் எலுமிச்சைப் பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி, அதில் கிராம்பினை புகுத்தி, கொசுக்கள் வரும் இடங்களில் வைக்க அவை அப்படியே வெளியேறும்.

உதிர்ந்த வேப்பிலைகளை சாம்பிராணியுடன் கலந்து புகைபோட்டால் கொசுக்கள் வெளியேறும். 

அமைதியான தூக்கம் வேண்டுமா? இந்த டிப்ஸ்களை தெரிஞ்சிக்கோங்க!

image credit to unsplash