சனி பகவானின் 3 நட்சத்திரங்களில் ஒன்றான பூசம் நட்சத்திரம் சந்திரனின் வீடான கடகம் ராசியில் உள்ளது.
சனி பகவானின் நிதானப்போக்கு இவர்களிடம் இயல்பாக காணப்படும்.
மதிகாரகனான சந்திரனின் மதிநுட்பமும் இவர்களுக்கு அனுகூலங்களை பெற்றுத் தரக்கூடியதாக இருக்கும்.
பூசம் நட்சத்திரக்காரர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்கள், சில விஷயங்களை எப்படியும் அடம் பிடித்து சாதித்துவிடுவார்கள், காரியத்தை சாதிக்க பொய்களை சொல்ல தயங்கமாட்டார்கள்.
தேவ கணம் பொருந்திய பூசம் நட்சத்திரம் ஒரு ஆண் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் விலங்கு ஆடு ஆகும். இதற்கு உரிய விருட்சம் அரச மரம் ஆகும். உரிய பறவை நீர் காகம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதியாக பிரகஸ்பதி எனும் குரு பகவான் உள்ளார்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சனி மகா தசை வருகிறது. சனி தசை என்பது ஸ்திர தசை என்பதால், ஆயுள் விருத்தி உண்டாகும். மேலும் இவர்களுக்கு புதன் தசை; புதன் புத்தி, சுக்கிர தசை; சுக்கிர புத்தி, சந்திர தசை; சந்திர புத்தி, ராகு தசை; ராகு புத்தி, குரு தசை; குரு புத்தி ஆகியவை நன்மைகளை தரும்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தஞ்சாவூருக்கு அருகே உள்ள விளாங்குளம் எனும் ஊரில் அமைந்துள்ள அட்சயபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்துவர பெரும் நன்மைகள் கிடைக்கும். மேலும் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிவாலயங்களில் வழிபாடு நடத்த அனுகூலங்கள் கிடைக்கும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருஓணம், திருவாதிரை, சுவாதி, சதயம், புணர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் புதிய செயல்களில் இறங்கினால் நன்மைகள் கிட்டும்.
காலையில் ஒரு கப் பப்பாளி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?