வாழ்க்கையில் கிடைக்கும் நல்லது - கெட்டதுகளை அப்படியே ஏற்றுக்கொள்ள
வேண்டும்.
எந்தவொரு விஷயத்திலும் முழுமை என்பது கிடையாது. முடிந்தவரை நல்ல இல்லறத்
துணையாக இருக்க முயற்சிக்க வேண்டும்.
எளிமையான வாழ்க்கையும் ஒவ்வொரு செயல்களையும் நிதானமாக செய்வதும் முக்கியம். இங்கு வேகமாகப் போய் ஒன்றும் செய்யப்
போவதில்லை.
வாழ்வில் இன்பம், துன்பம் ஆகிய இரண்டு நிகழும்போதும் மனதிருப்தியுடன் இருக்கப் பழக வேண்டும்.
நேர்மை நம்பிக்கைத் தன்மையை வளர்க்கிறது. நமது இல்லறத்
துணையுடன் நேர்மையாக நடந்துகொள்வது ஒருவர் மேல் ஒருவருக்கு பிணைப்பினை உண்டாக்கும். அது மனநிறைவு தரும்.
அடிக்கடி நன்றி தெரிவிப்பது, இல்லறத்
துணையின் செயல்களைப் பாராட்டுவது ஆகியவை ஒருவருக்கொருவர் மனநிறைவைத் தரும்.
கோபத்தில் பேசும்போது நம் வார்த்தைகளால் பிரச்னைகள் அதிகம் ஆகும். எனவே, முடிந்தவரை அமைதியாக இருங்கள்.