தேவையான பொருட்கள்
பெரிய நெல்லிக்காய் – 1 (விதைகளை நீக்கிவிடவேண்டும்) மாதுளை – ஒரு கப் இஞ்சி – கால் இன்ச் கேரட் – 1 (சிறியது) பீட்ரூட் – 1 (சிறியது) கறிவேப்பிலை – 3 கொத்து மல்லித்தழை – சிறிதளவு புதினா – சிறிதளவு தேன் – 2 ஸ்பூன்
விதைகளை நீக்கிய பெரிய நெல்லிக்காய், மாதுளை, கேரட், பீட்ரூட், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா என அனைத்தையும் ஒன்றாக ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
இதில் தேன் கலந்து காலை அல்லது மாலை என இருவேளைகளில் ஏதேனும் ஒருமுறை 200 மில்லி லிட்டர் அளவு பருகவேண்டும்.