பிளாட் வாங்கும்போது சரிபார்க்க வேண்டியவை

By Marimuthu M
May 06, 2024

Hindustan Times
Tamil

சட்டப்பூர்வ மற்றும் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த, மூல உரிமை வரலாறு, விற்பனைப் பத்திரங்களை சரிபார்க்க வேண்டும்.

 பஞ்சாயத்து, முனிசபல் விதிமுறைகளின் படி, சொத்து சட்டப்பூர்வ வாங்குதலுக்கு ஏற்றது தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

சொத்துப் பதிவு மற்றும் உரிமையை நகராட்சி அதிகாரிகளிடம் சரிபார்க்கவும்.

நீர், மின்சாரம் மற்றும் தீ பாதுகாப்புக்காக அலுவலர்களிடம்  தடையில்லாச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

பிளாட் வாங்கும்போது வாடிக்கையாளரின் மதிப்புரைகள், அவர்களின் திருப்தி ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். 

ஒரு பிளாட்டின் மறைக்கப்பட்ட செலவுகள் எனப்படும் பதிவுக் கட்டணம், முத்திரைக் கட்டணம், பராமரிப்புக் கட்டணம், வரிகள் போன்ற கூடுதல் செலவுகளை மதிப்பீடு செய்யவேண்டும். 

ஒரு பிளாட்டினை வாங்கும்போது மறுவிற்பனை மதிப்பு, வரவிருக்கும் திட்டங்கள், உள்ளூர் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும்

டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்