ராக் சால்ட் என சொல்லப்படும் பாறை உப்பு பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Sep 24, 2024
Hindustan Times Tamil
ராக் சால்ட் ஆனது வறண்ட காலநிலையில் கடல் நீர் ஆவியாகி சோடியம் குளோரைடு படிகங்களை உருவாக்குகிறது. இவை பல்வேறு நன்மைகள் கொண்டுள்ளது
செரிமானம், சுவாச ஆரோக்கியம் முதல் பல்வேறு நன்மைகள் ராக் சால்ட் சேர்ப்பதால் கிடைக்கிறது
ராக் சால்டில் இருக்கும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உடலின் எலெக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கிறது. அதேபோல் உடலின் ரத்த அழுத்தம் அளவையும் சமநிலையுடன் வைக்க உதவுகிறது
உடலின் செரிமான நொதிகளை தூண்டுகிறது. இதன் விளைவாக ஊட்டச்சத்துகள் சரியான முறையில் உடைக்கப்பட்டு செரிமானத்தை மேம்படுத்துகிறது. அத்துடன் மலச்சிக்கல், வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கிறது
ஆவி பறக்கும் நீரில் ராக் சால்ட் சேர்த்து சுவாசிப்பதன் மூலம் சுவாசப்பாதையை சுத்தமாக்கி ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசம் தொடர்பான நோய் பாதிப்பின் அறிகுறிகளை குறைக்கிறது
ராக் சால்டில் இடம்பிடித்திருக்கும் தாதுக்கள் சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறு. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, பளபளக்கும் தன்மையை மேம்படுத்துகிறது
இதில் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற ஏராளமான தாதுக்கள் நிறைந்துள்ளன. உடல் எலெக்ட்ரோலைட்களை தக்க வைக்க உதவுவதோடு, நீரேற்றத்துடன் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது