நயன்தாரா - தனுஷ் இடையேயான பிரச்சினையில், பார்வதி நயன்தாராவுக்கு ஆதரவாக பதிவு வெளியிட்டது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கான காரணத்தை அவர் தற்போது பேசி இருக்கிறார்.

By Kalyani Pandiyan S
Nov 25, 2024

Hindustan Times
Tamil

இது குறித்து மனோரமா நியூஸ் சேனலுக்கு பேசிய அவர், “ நயன்தாரா தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு இந்த இடத்தை அடைந்திருக்கிறார். 

அவர் அவருக்கு நேர்ந்த அனுபவங்களை மூன்று பக்க அறிக்கையாக சமர்பித்து இருக்கிறார். அதனால்தான் அதனை வெளிப்படையான கடிதமென்று அழைக்கிறோம்.

அதனால்தான் நான் அவருக்கு உறுதுணையாக நிற்கவேண்டும் என்று நினைத்தேன். இது உண்மையான பிரச்சினை.

நயன்தாராவை ஆதரிக்கும் அனைவரும், அவரது கடிதத்தில் உண்மை இருப்பதாக நம்புகிறார்கள். 

இது போன்ற சம்பவங்களில் சப்போர்ட் கிடைக்காத போது, அந்த ஃபீல் எப்படி இருக்கும்?என்பது எனக்குத் தெரியும். 

நானும் அதனை கடந்து வந்து இருக்கிறேன். அந்த சப்போர்ட் ஒரு நபரை எந்தளவு மாற்றும் என்பது எனக்குத் தெரியும். 

ஆகையால், இப்படிப்பட்ட மக்களுக்காக நான் எப்போதும் நிற்பேன்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

உங்களிடம் உங்கள் குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது?