வெளியே நீங்கள் உறவில் ஈடுபடும் போது, ஆணுறை பெரும் அளவு பாதுகாப்பு தருவதில்லை. ஆனாலும், ஆணுறையில் சில விசயங்களை நீங்கள் கவனித்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்

By Stalin Navaneethakrishnan
Jul 05, 2023

Hindustan Times
Tamil

ஆணுறை அணிந்து செக்ஸ் வைத்திருந்தால் HIV வருமா? என்கிற சந்தேகம் பலருக்கு உள்ளது. அந்த சந்தேகம் தொடர்பாக, பிரபல செக்ஸ் நிபுணர் டாக்டர் காமராஜ் தங்கசாமி வீடியோ ஒன்றில் விளக்கியுள்ள விளக்கத்தை பார்க்கலாம்

ஆணுறை பாதுகாப்பானது தான். ஆனால் 100க்கு 100 சதவீதம் பாதுகாப்பு ஆனது இல்லை. 95 முதல் 99 சதவீதம் பாதுகாப்பானது

ஆணுறையில் சில விசயங்களை நீங்கள் கவனித்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

ஆணுறையில் காலாவதி தேதியை செக் செய்து கொள்ள வேண்டும்

ஆணுறை வாங்கும் போது ஏதாவது சேதம் அடைந்திருக்கிறதா என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும்

இரண்டு ஆணுறை அணிந்தால் இரட்டை பாதுகாப்பு என்று நினைக்கிறார்கள். அது தவறு. பலவீனமாகி ஓட்டை விழுந்துவிடும்.

ஆணுறை மீது ஜெல் பயன்படுத்துவது போன்ற விசயங்களை செய்யக் கூடாது. 

ஒரே பெண்ணுடன் இரு முறை செக்ஸ் வைத்தாலும், ஒரே ஆணுறையை இரு முறை பயன்படுத்த கூடாது. ஒரு ஆணுறைக்கு ஒரு முறை தான் வாழ்நாள்.

ஓட்டை இருக்கிறதா என்று சோதிக்க ஊதி பார்க்க கூடாது. இந்த விழிப்புணர்வு இருந்தால்  பாதுகாப்பு கிடைக்கும். 

மும்பை வீரர் டிம் டேவிட்டின் மனைவியும் விளையாட்டு வீராங்கனை