மும்பை வீரர் டிம் டேவிட்டின் மனைவியும் விளையாட்டு வீராங்கனை

By Pandeeswari Gurusamy
May 12, 2024

Hindustan Times
Tamil

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிம் டேவிட் தனது வலுவான பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். தற்போது ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

டிம் டேவிட்டின் மனைவியும் விளையாட்டு வீராங்கனை. இருவரும் விளையாட்டு போட்டியின் போது சந்தித்துள்ளனர். அதிலிருந்து அவர்களின் காதல் கதை தொடங்கியது.

டிம் டேவிட்டின் மனைவி பெயர் ஸ்டீபனி கெர்ஷா. ஆஸ்திரேலியாவுக்காக ஹாக்கி விளையாடுகிறார். முன்கள வீராங்கனையாக இருப்பதால் கோல் அடிப்பதில் வல்லவர்.

டேவிட் மற்றும் கெர்ஷா அவர்களின் திருமணத்திற்கு முன்பு பல ஆண்டுகள் டேட்டிங் செய்தனர். இறுதியாக ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் தனியார் விழாவில் திருமணம் நடந்தது.

இருவரும் விளையாட்டுகளை மிகவும் விரும்புகிறார்கள், அந்தந்த விளையாட்டுகளில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். டவுன்ஸ்வில்லில் பிறந்த கெர்ஷா, ஜெர்சி எண் 14 அணிந்துள்ளார். இதுவரை ஆஸ்திரேலியாவுக்காக 89 ஹாக்கி போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கெர்ஷாவும் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

டேவிட் தற்போது ஐபிஎல்லில் தனது பேட்டிங்கில் சொதப்பினார். ஆனால் நீண்ட சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவர். போட்டியின் உருவத்தையே மாற்றும் வல்லமை அவருக்கு உண்டு.

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி தேர்தல் 2025: அரவிந்த் கெஜ்ரிவால் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 விஷயங்கள்! 

HT News