’முட்டையை ஃபிரிட்ஜில் வைத்தால் ஆபத்தா?’ எப்படி சேமித்தால் நீண்டநாட்கள் வரும்! இதோ முழு விவரம்!

By Kathiravan V
Apr 23, 2024

Hindustan Times
Tamil

அறை வெப்ப நிலையில் முட்டையை வைத்துக் கொண்டு இருக்கும் போது அதன் வாழ்நாள் ஒன்று முதல் 2 வாரங்கள் ஆகும். அதற்கு மேல் முட்டை இருந்தால் பெரும்பாலும் கெட்டுப்போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

ஆனால் முட்டையை ஃபிரிட்ஜில் வைத்து பயன் படுத்தினால் அதன் வாழ்நாள் நீடிக்குமா என்றால், ஆமாம் என்பதுதான் பதிலாக உள்ளது

ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் மற்றும் ஐக்கிய அமெரிக்க உணவு பாதுகாப்பு கழகம் நடத்திய ஆய்வில் முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கும் போது அதன் வாழ்நாள் 4 முதல் 5 வார காலம் அதிகமாகிறது என தெரிய வந்து உள்ளது. 

முட்டையை ஃபிர்ஜில் உள்ள ட்ரேவில் வைத்து உள்ளோம். அந்த பகுதியில்தான் குளிர்ச்சி குறைவான இடம், ஆனால்  குளிர்சாதன பெட்டியில் குளிர்ச்சி எங்கு அதிகமாக இருக்குமோ (ப்ரீசரில் அல்ல) அந்த பகுதியில் வைக்கும் போது அதன் வாழ்நாள் நீடிக்கும். 

முட்டையை கழுவி உயபோகித்தால் மேல் உள்ள கிருமி போய்விடும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு, முட்டையை கழுவும் போது சால்மன் கிருமிகளை தடுக்கும் தடுப்பு படலம் பாதிக்கப்படும்.

முட்டையை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும் என்றால் அதை தாராளமாக வைத்து 3 முதல் 4 வாரங்கள் வரை பயன்படுத்தலாம். அல்லது வெளியே வைப்பதாக இருந்தால் ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என்பது மருத்துவர் அருண் குமார் கூறும் கூற்றாக உள்ளது.

அமெரிக்கா போன்ற நாடுகளில், முட்டைகள் நுகர்வோருக்கு விற்கப்படுவதற்கு முன்பு கழுவப்பட்டு சுத்தப்படுத்தப்படுகின்றன. இந்த செயல்முறையானது முட்டை ஓட்டில் உள்ள இயற்கையான பாதுகாப்பு படலத்தை நீக்கி, பாக்டீரியாவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு நடிகர் கவின் பதில் அளித்திருக்கிறார்.