Teeth Tips : எச்சரிக்கை..  தினமும் பல் துலக்கும் முன் இந்த விஷயத்தை  கவனிச்சு இருக்கீங்களா?

By Pandeeswari Gurusamy
Jan 23, 2024

Hindustan Times
Tamil

மனிதனின் உடலில் உள்ள மற்ற உறுப்புகளைப் போன்று மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றுதான் பற்கள். இவை இல்லையென் றால் ஒருவரின் முக அமைப்பே மாறிவிடும். 

pixa bay

மனிதனுக்கு மொத்தம் 32 நிலைப்பற்கள் உள்ளன. இந்த பற்கள் சிறுவயதில் தோன்றி வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும் தன்மை கொண்டது. பற்கள் பாதிக்கப்பட்டால் ஏராளமான நோய்கள் வர வாய்ப்பு உண்டு

pixa bay

பற்கள்தான் ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பற்களை ஆரோக்கியமாக இருந்தாலே பெரும்பாலான நோய்கள் நமக்கு வரவே வராது.

pixa bay

பற்களை சுத்தம் செய்வதற்கு நாம் காலையில் எழுந்ததும் பிரஷ் செய்வதை அடிப்படையான பழக்க வழக்கமாக கொண்டுள்ளோம். தினம்தோறும் பல் துலக்குவதற்கும் சில காரணங்கள் உள்ளன. நாம் உண்ணும் உணவில் உள்ள பொருட்கள் எளிதில் பற்களில் தங்கிவிடும். இதை நீக்குவதற்காகப் பற்களை துலக்க வேண்டும். 

pixa bay

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பல் துலக்கிவிட வேண்டும். சிலர் காலையில் வீட்டு வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு, கடைசியாக பிரஷ் செய்வார்கள். தாமதமாக பல் துலக்கும்போது பற்களில் தங்கியிருக்கும் உணவுப் பொருள்கள் கூடுதல் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். 

pixa bay

சாப்பிட்ட பின்பு வாயில் எஞ்சி இருக்கும் உணவுத் துகள்களே பாக்டீரியாக்கள் பெருகும் இடங்கள். எனவே, ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்ததும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.

pixa bay

தினமும் காலை, இரவு என்று தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியமாகும். இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் செல்வதற்கு முன்பு பிரஷ் செய்வது நல்லது. இரவு படுக்கும்போது உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்துவிட்டுப் படுப்பது பற்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். ஒருநாளைக்கு இரண்டு முறைக்கும் மேலே பல் துலக்குவதால் பற்களில் மேல் இருக்கும் எனாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.

pixa bay

பிரஷ் செய்வதற்கு முன்பாக டீ, காபி, உணவு என ஏதேனும் சாப்பிட்டால் பற்களில் கறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, பிரஷ் செய்வதற்கு முன்பாக காபி, டீ குடிப்பதை தவிர்த்துவிடுவது நல்லது. வாய்க் கொப்பளிப்பது பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறந்த பழக்கம். 

pixa bay

ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் வாய் கொப்பளிப்பது நல்லது. நீண்ட நேரம் பிரஷை வாய்க்குள்ளேயே வைத்திருப்பது ஆரோக்கியமான பழக்கம் கிடையாது என மருத்துவா்கள் தொிவிக்கின்றனா். 

pixa bay

பிரஷ்ஷில் டூத் பேஸ்ட்டை எடுத்து இரண்டு நிமிடங்களுக்குள் பிரஷ்செய்து முடித்து விடுவது நல்ல பழக்கமாகும். மேற்கண்ட தகவல்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.

pixa bay

பலாப்பழத்தில் கிடைக்கும் நன்மைகள்