சிம்மத்தில் இருந்து கன்னிக்கு செல்லும் சூரியன்! பணத்தை குவிக்க போகும் 7 ராசிகள்!
By Kathiravan V Sep 10, 2024
Hindustan Times Tamil
கிரகங்களின் அரசன் ஆகத் திகழும் சூரிய பகவான் மாதம் தோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதன் அடிப்படையிலேயே தமிழ் மாதங்கள் கணக்கீடு செய்யப்படுகின்றது.
தற்போது தனது சொந்த வீடான சிம்மத்தில் சூரிய பகவான் உள்ளார். இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி அன்று கன்னி ராசிக்கு மாறுகிறார். அன்றைய நாளில்தான் புரட்டாசி ஒன்றாம் தேதி பிறக்கின்றது. சூரியன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் நாள் ஆனது கன்னி சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகின்றது.
மேஷம் ராசிக்காரர்களுக்கு ராசி நாதன் ஆன செவ்வாய் பகவான் 3ஆம் வீட்டில் இருப்பதால் தைரியம், வீரியத்தோடு செயல்படுவீர்கள். சூரியன் 6ஆம் இடத்தில் அமர்வதால் அரசாங்கம், அரசு பதவிகள் மூலம் ஆதாயங்களை தரும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கான முதலீடுகளை செய்வீர்கள். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ராசி நாதன் ஆன சுக்கிரன் சூரியன், புதன் உடன் கன்னி ராசியில் உள்ளார். கேது பகவானும் அங்கே உள்ளார். உங்கள் ராசி நாதன் நீசபங்க ராஜ யோகம் பெற்று உள்ளார். பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். லாபங்கள் அதிகரித்து செல்வம் சேர்க்கும் காலமாக இது இருக்கும்.
மிதுனம் ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் ஏற்பட்டாலும் கவனமாக இருப்பது அவசியம். சூரியன் 4ஆம் இடத்தில் அமர்வதால் தாய் உடல்நிலையில் கவனம் தேவை. குரு பார்வையில் கௌரவம், புகழ், சுகம், விருத்திகள் உண்டாகும்.
கடகம் ராசிக்காரர்களுக்கு 2க்கு உடையவன் ஆன சூரியனை குரு பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். உங்கள் சொல்லுக்கு மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சமூகத்தில் பாராட்டுக்களை பெறுவீர்கள்.
சிம்மம் ராசிக்காரர்களுக்கு ராசி நாதன் ஆன சூரியன் 2ஆம் இடத்தில் உள்ளார். தனம், வாக்கு, குடும்பம் செழிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். நீண்டகாலமாக வராமல் இருந்த பணவரவுகள் கிடைக்கும். பங்குச்சந்தை மூலம் லாபம் கிடைக்கும்.
விருச்சிகம் ராசிக்கு ராசி நாதன் 8ஆம் இடத்தில் புதன் வீட்டில் உள்ளார். நிறைய புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். உத்வேகத்துடன் உழைத்தால் வெற்றிகள் கிடைக்கும். 11ஆம் இடத்தில் இருப்பதால் அதிக லாபங்கள் கிடைக்கும். அரசு ஊழியர்கள், அரசுடன் இணைந்து தொழில் செய்பவர்கள் சிறப்பான பணவரவை பார்ப்பீர்கள்.
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சியால் நிறைய பணவரவு உண்டாகும். புதிய கடன்களை வாங்கி சொத்துக்களை வாங்குவீர்கள். உறவுகள் உடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வீர்கள். 9 மற்றும் 10ஆம் இடத்திற்கு உரியவர்கள் மூலம் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாவதால் வாழ்கையில் முன்னேற்றம் பெறும் வாய்ப்புகள் ஏற்படும்.