’மாடி வீடு கட்டி மாஸ்காட்ட போகும் ரிஷபம் ராசி! அசுர குருவின் ஆட்டம் ஆரம்பம்!' சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!

By Kathiravan V
Nov 13, 2024

Hindustan Times
Tamil

நவகிரகங்களில் அசுர குரு எனப்படும் சுக்கிர பகவானுக்கு தனி இடம் உண்டு. பொருள் சேர்க்கை, திருமணம், மகிழ்ச்சி, கலை, திறமை, அழகு, காதல், காமம், ஆடைகள், அலங்காரம், ஆபரணங்கள் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகமாக சுக்கிரன் உள்ளார். ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.

விருச்சிகம் ராசியில் இருந்த சுக்கிர பகவான் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 வரையிலான 26 தனுசு ராசியில் வாசம் செய்ய உள்ளார். சுக்கிரன் அதிபதியாக உள்ள ரிஷபம் ராசியில் குரு பகவானும், குரு பகவான் அதிபதியாக உள்ள தனுசு ராசியில் சுக்கிர பகவானும் அமர்ந்து பரிவர்தனை யோகத்தை உண்டாக்கி உள்ளனர். இந்த யோகம் ஆட்சிக்கு இணையான பலன்களை கொடுக்கும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.

சுக்கிர பெயர்ச்சி மூலம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக தொழில் மற்றும் வேலைகளை மாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல காலம். கிரக பெயர்ச்சியால் செல்வங்கள் சேரக்கூடிய அமைப்பு உண்டாகி உள்ளது. 

ராசிக்கு 8ஆம் இடத்தில் சுக்கிரன் அமர்வதால் மறைமுக செல்வம் சேரும் காலம் உண்டாகி உள்ளது. பழைய முதலீடுகள் லாபம் ஈட்டும். உடல்நிலை பாதிப்புகள் விலகும். கமிஷம் தொழில், ரியல் எஸ்டேட் தொழில்களில் லாபம் கொழிக்கும். 

பரிவர்த்தனை யோகம் காரணமாக மந்தமாக இருந்த முதலீடுகள் லாபகரமானதாக மாறும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். பணிச்சுமையால் மன அழுத்தம் உண்டாகலாம் என்பதால் நிதானம் தேவை. பணியிடங்களில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு செல்வங்கள் சேரும். வங்கி மற்றும் வங்கி சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்னைகள் படிப்படியாக தீரும். சிலர் புதிய வீடுகளை கட்டி குடிபுகுவீர்கள். 

பணியிடங்களில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு செல்வங்கள் சேரும். வங்கி மற்றும் வங்கி சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்னைகள் படிப்படியாக தீரும். சிலர் புதிய வீடுகளை கட்டி குடிபுகுவீர்கள். 

 வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். சிலர் பழைய வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் மூலம் ஆதாயம் கிடைக்கும். முருக வழிபாடு வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் விலகி நன்மைகள் கிடைக்கும். 

பூராடம் நட்சத்திரத்தில் சுக்கிரன் வரும் காலத்தில் யோகம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். பயமின்றி தொடங்கும் செயல்களால் வருமானம் பெருகும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். உங்கள் காதலுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும்.

சங்கு பூ தேநீர் தரும் நன்மைகள்