சுற்றி அடிக்கும் சுக்கிரன்! ’காதல், திருமணம், காமத்தில் திளைக்க போகும் மகரம் ராசி!’ சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!
By Kathiravan V Nov 11, 2024
Hindustan Times Tamil
நவகிரகங்களில் அசுர குரு எனப்படும் சுக்கிர பகவானுக்கு தனி இடம் உண்டு. பொருள் சேர்க்கை, திருமணம், மகிழ்ச்சி, கலை, திறமை, அழகு, காதல், காமம், ஆடைகள், அலங்காரம், ஆபரணங்கள் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகமாக சுக்கிரன் உள்ளார். ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.

மகரம் ராசிக்கு 5 மற்றும் 10ஆம் வீடுகளுக்கு அதிபதியாக சுக்கிர பகவான் உள்ளார். 12ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகி உள்ள சுக்கிர பகவான் மூலம் லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில்களில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்கள் உண்டாகும். சிலர் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் கிளை அலுவலங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை திறப்பீர்கள்.
வேலைக்காக வெளிநாடு செல்ல விசாவுக்காக காத்திருப்பவர்களுக்கு விசா கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். அரசு வேலைகளுக்காக காத்து இருப்பவர்களுக்கு அனுகூலங்கள் கிடைக்கும் நேரம் இது.
அரசாங்கத்தில் இருந்து சான்றிதழ், அனுமதி உள்ளிட்டவைகளுக்காக காத்து இருப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும் என்பதால் சுப செலவுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும், குழந்தை பாக்கியம் உண்டாகும், கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும், தாம்பத்திய வாழ்கை சிறக்கும். இல்லறத்தில் இன்பம் பிறக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
வேலை மற்றும் வேலை சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். புதிய முதலீடுகளை செய்வீர்கள். தொழிலாளிகள் மூலம் லாபம் பெருகும். பணியில் இடமாற்றத்திற்காக காத்து இருந்தவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும்.
குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!