ஆடி மாதம் முதல் சிம்மத்தில் இணைந்து பயணம் செய்யும் காதல் கிரகங்களுக்கு சனியின் பார்வையும், குருவின் பார்வையும் கிடைக்கப்போகிறது.
By Stalin Navaneethakrishnan Jul 02, 2023
Hindustan Times Tamil
இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வைகளால் ஆடி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.
Enter text Here
Enter text Here
சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும் பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர்.
கும்ப ராசியில் காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் உடன் பயணம் செய்யப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.
சிலருக்கு காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் முதலீடு செய்யும் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும்.
சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். செவ்வாய், சுக்கிரன் பார்வை உங்கள் ராசியில் உள்ள சனிபகவானின் மீது விழுகிறது.
பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் சமூகத்தில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும்.
சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.
சுக்கிரன் பெயர்ச்சியால் ஆடி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு இதுவே நடக்க வாய்ப்பிருக்கிறது