மகரத்தில் நுழையும் சுக்கிரன்! திருமண யோகம் கைக்கூடும் 6 ராசிகள்! இனி மஜாதான்!
By Kathiravan V Nov 28, 2024
Hindustan Times Tamil
பண்டிட் திவாகர் திரிபாதியின் கூற்றுப்படி, வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி அன்று திங்கட்கிழமை மாலை 4:46 மணியளவில் மகரம் ராசிக்கு வரும் சுக்கிர பகவான் ஆனவர் டிசம்பர் 29ஆம் தேதி வரை அங்கு இருப்பார். சுக்கிர பகவான் ஆனவர் கலை, அழகு, காதல், அதிர்ஷ்டம், திருமணம், மகிழ்ச்சி ஆகியவற்றின் அடையாளமாக உள்ளார்.
சுக்கிரனின் இந்த மாற்றம் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். பொருளாதார நடவடிக்கைகளில் விரிவான முன்னேற்றம் இருக்கும். சர்வதேச அளவில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்கும். விளையாட்டு, கலை, இலக்கியம், சினிமா தொடர்பான ஆளுமைளுக்கு புகழ் சேரும். தேசிய அளவில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும்.
மேஷம் ராசிக்காரர்களுக்கு வாகனம் மற்றும் பூமி சார்ந்த விவகாரங்களில் முன்னேற்றங்கள் கூடும். தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கடின உழைப்பும் முன்னேற்றமும் உண்டாகும். வேலை மற்றும் பணியிடத்தில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் மேம்படும். பணம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மன உறுதி, ஆளுமை, முன்னேற்றம் உண்டாகும். வேலையில் அதிர்ஷ்டம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். சமூக அந்தஸ்து, கௌரவம், மரியாதை உயரும். கலைத்துறை மீது ஆர்வம் அதிகரிக்கும். திருமண வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் உறவுகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் உள்ள வேலைகள் சாதகமாக முடியும். விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்றம் பிறக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை ஏற்படும். மாணவர்கள் படிப்பில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் உங்கள் செயல்பாட்டை கெடுக்கலாம்.
கடகம் ராசிக்காரர்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை மூலம் ஆதாயம் கிடைக்கும். காதல் விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழில் சாதகமாக இருக்கும். ரியல் எஸ்டேட் மூலம் லாபம் பெறுகும். தாயிடமிருந்து ஆதரவை பெறுவீர்கள். கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் கூடும். நீண்ட தூர பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு. உங்களுக்கு நெருக்கமானவர்களால் சங்கடங்கள் வரலாம். எடுக்கும் முயற்சியில் தடைகள் ஏற்படும். உடல் நலனில் சற்று கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களை நினைத்து கவலைப்படுவீர்கள்
கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி சார்ந்த முன்னேற்றங்கள் உண்டாகும். தீடீர் பண வரவு மகிழ்ச்சியை தரும். குழந்தைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். படிக்கும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உயரதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் புத்திசாலித்தனம் செல்வத்தை கொண்டு வந்து சேர்க்கும். வியாபாரம் பெருகும். (Pixabay)
டிசம்பர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்