பிரபல நடிகையான சினேகா தன்னுடைய பர்சனல் தொடர்பான விஷயங்களை தொகுப்பாளினி ரம்யா உடனான நேர்காணலில் பகிர்ந்து இருக்கிறார்.  இது குறித்து அவர் பேசும் போது, “நானும் பிரசன்னாவும் மிகச் சிறந்த நண்பர்களாக தான் முதலில் இருந்தோம். பின்னர் நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். 

By Kalyani Pandiyan S
Apr 19, 2024

Hindustan Times
Tamil

கல்யாணத்திற்கு பிறகு எங்களுடைய தனிப்பட்ட பிரைவசிக்காக, நாங்கள் வாடகை வீட்டில்தான் வசித்தோம். ஆனால் ஆரம்ப கட்டத்தில் வீடு கிடைக்காத காரணத்தால், அவர் அவரது வீட்டில் இருந்தார். நான் என்னுடைய வீட்டில் இருந்தேன்.  கல்யாணம் முடிந்து 15 முதல் 20 நாட்கள் வரை நாங்கள் அப்படித்தான் இருந்தோம். நாங்கள் வீடு தேடி சென்றால், சினிமா நடிகர்களுக்கு நாங்கள் வீடு கொடுப்பதில்லை என்று முகத்திற்கு நேராக சொல்லி விடுவார்கள். அதனால் வீடு கிடைப்பதில் எங்களுக்கு கொஞ்சம் சிக்கல் இருந்தது.

அதன் பிறகு எங்களுக்கு வீடு கிடைத்தது. வீட்டில் நாங்கள் இரண்டு பேரும் தனியாகத்தான் இருந்தோம். எங்களுக்கென்று வேலை செய்வதற்கு யாரும் இல்லை. வீட்டை சுத்தம் செய்வது தொடங்கி, சமையல் செய்வது வரை என எல்லா வேலைகளையும் நானே செய்தேன்.

எனக்கு உண்மையில் அந்த மாதிரியான வேலைகளை செய்வது மிகவும் பிடிக்கும். நான் எப்போது கர்ப்பம் தரித்தேனோ, அதன் பின்னர்தான் வீட்டிற்கு ஒரு பணியாளர் வேண்டுமென்று சொல்லி, ஒருவரை நியமித்தோம். 

முதல் மூன்று வருடங்களில் மிகவும் நெருக்கமாக, முத்தம் கொடுத்துக்கொண்டு, வாழ்ந்து கொண்டிருந்தோம். அதன் பின்னர் குழந்தை வந்தது. மொத்த கவனமும் குழந்தை மீது திரும்பியது. அதன் பின்னர் இரண்டாவது குழந்தை வந்தது. இப்போது குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற கவலை வந்து இருக்கிறது. 

எங்களுக்குள் சலிப்பு வரவில்லை என்று நான் பொய் சொல்ல விரும்ப வில்லை. சலிப்பு வந்தது உண்மைதான். அது மாதிரியான நேரங்களில் நாங்கள் இரவு டேட்டிங் செல்வோம். அப்போது நிறைய பழைய நினைவுகளை அசை போடுவோம். பின்னர் மீண்டும் பழைய காதல் துளிர்த்து விடும். 

நானும் பிரசன்னாவும் எலியும், பூனையுமாக சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால் சண்டை போட்டதற்கு பிறகு, யார் மீது தவறு சரி என்பதை பார்ப்பதை தாண்டி, நான் சொன்ன கருத்தை அவரும், அவர் சொன்ன கருத்தை நானும் புரிந்து கொண்டோமா என்பது மிக முக்கியமாக இருக்க வேண்டும்." என்று பேசினார்!

செப்டம்பர் 11-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்