’சிவகாசியை தெரியும்! அய்யநாடார், சண்முக நாடாரை தெரியுமா?’ பட்டாசு பிறந்த கதை!
By Kathiravan V Nov 09, 2023
Hindustan Times Tamil
அக்காலகட்டத்தில் கயிறு திரிப்பது, மண் பானை செய்வது, பால் மாடு வளர்ப்பது என சின்னச் சின்ன தொழில்களை செய்துதான் சிவகாசியில் பலரும் வாழ்கையை தள்ள வேண்டிய நிலை இருந்தது.
1922ஆம் ஆண்டு அவ்வூரை சேர்ந்த ஒருவர் பத்திரிக்கை செய்தி ஒன்றை அய்ய நாடாருக்கும், அவரது உறவினரான சண்முகநாடாருக்கும் காட்டினார். அதில் தீப்பெட்டி தயாரிப்பது எப்படி என்பது பற்றி அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
சண்முக நாடார்
அய்யநாடார்
சென்னைக்கு சென்று அங்கிருந்து கொல்கத்தாவை அடைந்த அவர்கள் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கற்றுக் கொண்டனர்.
1923ஆம் ஆண்டில் சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலையை தொடங்கினர். சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கிடைத்தது, உள்ளூர் பொருளாதாரம் மேம்பட்டு மக்கள் வாழ்வாதாரம் மேம்பட்டது.
1925ஆம் ஆண்டில் முதன்முதலாக ‘தேசிய பட்டாசுக்கள்’ என்ற பெயரில் பட்டாசுக்களை செய்யத் தொடங்கினர்.
அய்ய நாடார் ‘அணில் பட்டாசுக்கள்’ என்ற பெயரிலும், சண்முகநாடார் ’சேவல் பட்டாசுகள்’ என்ற பெயரிலும் தனித்தனியாக பட்டாசுகளை தயாரித்தனர்.
1984ஆம் ஆண்டில் ‘அயன் பட்டாசுகள்’ என்ற பெயரிலும் பட்டாசு ரகங்கள் விற்பனைக்கு வந்தது.
சிவகாசியில் தீப்பெட்டி தயாரிப்பு என்ற பெயரில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட விதை தற்போது விருச்சமாக வளர்ந்து உள்ளது. தற்போது பசுமை பட்டாசு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நிலையில் அதை நோக்கி பயணிக்க வேண்டிய கட்டாயமும் சிவகாசி நகருக்கு உள்ளது.
தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!