பணம் கொட்டும்! பதவி கிட்டும்! சிம்ம ராசிக்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள்!
By Kathiravan V Oct 05, 2024
Hindustan Times Tamil
குரு பகவான் ஆனவர் வரும் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரை 119 நாட்கள் வக்ரம் பெற உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் வலுவாக இருக்கும்போது, ஜாதகர் சத்தியத்தின் பாதையில் செல்வார்.
கண்கள் மற்றும் முகத்தில் ஒரு பிரகாசமான தோற்றம் இருக்கும். ஒரு மனிதனின் ஒழுக்கத்தை சிறப்பாக தரக்கூடிய கிரகம் குரு ஆகும். பெருமை, மேன்மை, தனம், செல்வாக்கு, கல்வி, குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தரும் கிரமாக குரு உள்ளார். இயற்கை சுபர் ஆக உள்ள குரு பகவான் பெருந்தன்மை குணத்திற்கு சொந்தக்காரர்.
சிம்ம ராசியை பொறுத்தவரை நம்பிக்கையே அவர்களின் பலம், அவசரப்படுவது அவர்களின் பலவீனம் ஆகும். பொறுமை இன்மையும், கோபப்படுவதும் இவர்களை சிக்கலில் தள்ளும். இந்த நிலையில் குரு வக்ரம் ஆனது சிம்மம் ராசியின் பலவீனத்தை சரி செய்யும் பெயர்ச்சியாக இருக்கும். சிம்மம் ராசிக்கு 10ஆம் இடமான ரிஷபம் ராசியில் குரு பகவான் வக்ரம் அடைகிறார். 10ஆம் இடத்தில் கிரகம் இருக்கும் போது நன்மைகள் ஏற்படும் என்பது ஜோதிட விதி ஆகும்.
இந்த காலகட்டம் சிம்மம் ராசிக்காரர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் காலமாக இருக்கும். சிம்ம ராசிக்கு இரண்டாம் இடமான தனஸ்தானத்தில் குருவின் பார்வை படுகின்றது. இந்த இடம் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை குறிக்கின்றது.
இதனால் பணவரவு அதிகரிக்கும், புதிய சேமிப்பை தொடங்குவீர்கள், உங்கள் பேச்சுக்கு மதிப்பு மற்றும் மரியாதை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரச்னைகளை சமாளிக்கும் திறன் கூடும்.
இந்த நான்கு மாதங்களுக்குள் செல்வச் செழிப்பு மற்றும் ஐஸ்வர்யம் உண்டாகும். பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பூமி வாங்க கூடிய யோகம் ஏற்படும். வீடு, மனைகளை அடகு வைத்தவர்கள் அதனை மீட்பார்கள். தாயாருக்கு ஏற்பட்ட மருத்துவ சிக்கல்கள் தீரும். உடலில் ஏற்பட்டு இருந்த நோய் பாதிப்புகள் தீரும்.
உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிரிகள் வழியில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். பிறந்த காலத்தில் குரு வக்ரமாக இருந்தவர்களுக்கு இந்த காலம் மிக நல்ல காலமாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும்.
குரு பகவான் வழிபாடு வாழ்கையில் மேன்மையை தரும். திருச்செந்தூருக்கு தீர்த்த யாத்திரை செல்லுதல் வெற்றியை ஏற்படுத்தி தரும். ஆலங்குடி, தென்குடி திட்டை, சென்னை திருவள்ளி தாயம், காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் உள்ள காயரோகணேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம் அடுத்த அகரம் கோயில், சிவகங்கை பட்டமங்கலம் வெள்ளியங்கி குருஸ்தலம், சோழவந்தான் குருஸ்தலம், குருவித்துறை போன்ற குரு பகவானின் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்ய சங்கடங்கள் தீர்ந்து நன்மைகள் கிடைக்கும்.
குளிர்காலத்தில் டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்