சிறுவயதில் இருந்தே தனக்கு நட்பு வட்டம் அமையவில்லை என்று செல்வராகவன் பேசி இருக்கிறார்.

By Kalyani Pandiyan S
Nov 24, 2024

Hindustan Times
Tamil

இது குறித்து லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசிய அவர்," நட்பு வட்டாரம் என்பது எனக்கு சிறுவயதிலிருந்தே அமையவில்லை. உண்மையில் சொல்லப்போனால் எனக்கு அந்த கொடுப்பினை இல்லை என்று நினைக்கிறேன்.

ஊட்டியில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ரூம் போட்டு ஜாலியாக இருப்பதை பார்க்கும் பொழுது, நாம் இதையெல்லாம் மிஸ் செய்து விட்டோமோ என்று நினைப்பதுண்டு.

அதற்கான காரணம், நான் எப்போதுமே வேலை வேலை என்றே இருந்து விட்டேன். வேலைதான் எனக்கு எல்லாமுமாக இருந்தது. இனி ஒன்றும் செய்ய முடியாது; 

இனிமேல் நான் யாரை போய் நட்பு பாராட்டுவது. நிறைய நண்பர்கள் வாரத்திற்கு ஒருமுறை சந்தித்துக் கொண்டு பேசுகிறார்கள்;ஜாலியாக இருக்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் தனியாகத்தான் உட்கார்ந்து இருக்கிறேன்.

அவர்களை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கிறது. என்னுடைய மகன் ரிஷிதான் தற்போது எனக்கு உற்ற நண்பனாக இருக்கிறான். நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவனிடம் சென்று விடுவேன். 

முதல் இரு குழந்தைகளுக்கும் என்னால் அவ்வளவு நேரத்தை செலவிட முடியவில்லை. அதனால், இவனுடனான நேரத்தை மிஸ் செய்யக்கூடாது என்று நினைத்துதான் இந்த பிரேக்கை எடுத்துக்கொண்டேன்." என்று பேசினார்

ஆயில் மசாஜ் செய்ய உகந்த நேரமும்.. அற்புத பலன்களும் இதோ!