நாளை வக்ர நிவர்த்தி பெறும் சனி! செம்ம அடி வாங்க போகும் 3 ராசிகள்! சிம்மம், விருச்சிகம், மகரத்திற்கு தலைவலி உறுதி!
By Kathiravan V Nov 14, 2024
Hindustan Times Tamil
நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனி பகவான் ஆவார். ஜோதிடத்தை பொறுத்தவரை ஒருவரது செயல்பாடுகளை சீர்த்துக்கி பார்த்து அதற்கு ஏற்ற பலன்களை தரக்கூடிய நீதிமானாக சனி பகவான் விளங்குகிறார். நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே அவரது பலன்கள் இருக்கும். சனி பகவானின் தாக்கம், நம்மை கடினமாக உழைக்கவும், பொறுமையாக இருக்கவும் கற்றுத்தருகிறது. பல விதமான தொழில்களுக்கு காரக கிரகமான சனி பகவான் நீதி தவறாத பண்பு உடையவர் ஆவார்.
ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வாசம் செய்யும் சனி பகவான் அந்த ராசிக்காரருக்கு மிகப்பெரிய வாழ்கை அனுபவத்தை வழங்க கூடிய கிரகமாக உள்ளார். சனி பகவான் தற்போது கும்பம் ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
அதே வேளையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி கும்பம் ராசியில் வக்ரம் பெற சனி பகவான் 139 நாட்களுக்கு பிறகு நவம்பர் 15ஆம் தேதியான நாளைய தினம் வக்ர நிர்வர்த்தி பெற உள்ளார். சனி பகவான் வக்ர நிர்வர்த்தி பெறுவது சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை கொண்டு வரும்.
சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் வக்ர நிர்வர்த்தி அடைவது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும். சனி வக்ர நிர்வர்த்தியால் சில ராசிக்காரர்களுக்கு உடல், மனம், பணம் சார்ந்த பிரச்னைகளை உண்டாக்கும்.
சனி வக்ர நிர்வர்த்தி அடைவது சிம்மம் ராசிக்காரர்களுக்கு சில சிரமங்களை உண்டாக்கும். பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பெரும் நிதி இழப்பு ஏற்படலாம். இந்த நேரத்தில், உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வாக்குவாதங்களில் இருந்து விலகி கோபத்தை தவிர்க்கவும். வேலையை மாற்ற நினைப்பவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். தொழிலதிபர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் வக்ர நிவர்த்தி என்பது சில பிரச்னைகளை உண்டாக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் உடன் பிரச்னைகள் வரலாம். புதிய முதலீடுகளை தற்போது செய்ய வேண்டாம். வியாபாரத்தை விரிவு செய்வதை தள்ளிப்போடவும். அதிகப்படியான செலவுகள் மன உளைச்சலை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
சனி பகவான் வக்ர நிவர்த்தி ஆனது மகர ராசிக்காரர்களுக்கு சில பிரச்னைகளை உண்டாக்கும். தொழிலதிபர்களுக்கு சில கடினமான நேரங்கள் உருவாகும். நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் வந்து விலகும். சிறிய விஷயங்கள் பெரிய பிரச்சினைகளாக மாறும் என்பதால் பேச்சில் கவனம் தேவை.
ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.