மலிவு விலை ராயல் பைக்கை அறிமுகம் செய்த ஹார்லி டேவிட்சன்!
By Kathiravan V Jun 10, 2023
Hindustan Times Tamil
ஹார்லி-டேவிட்சன், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து புதிய மோட்டார்சைக்கிளை உருவாக்கி உள்ளது.
X440 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரக பைக் ஹார்லி வகை வாகனங்களின் வரிசையில் மிகவும் மலிவு விலையில் இருக்கும் மோட்டார் சைக்கிளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை பைக்கில் காற்று-ஆயில் குளிரூட்டப்பட்ட இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
440 சிசி திறன் கொண்டிருக்கும் வகையில் இதன் எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹார்லி - டேவிட்சன் பைக்கின் எரிபொருள் டேங்க் கண்ணீர் துளி வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் சிறிய ரோட்ஸ்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது
LED விளக்குகள் வடிவமைப்பில் ஹார்லி-டேவிட்சன் தனி கவனம் செலுத்தி உள்ளது.
பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது. ஏபிஎஸ் சிஸ்டமும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
முன்பக்கத்தில் USD ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் இரட்டை எரிவாயு சஸ்பென்ஷன் உள்ளது