சென்னையில் புஷ்பா 2 படக்குழுவினர் 'வைல்ட் ஃபயர்' என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ’கிஸ் கிஸ் கிஸ்கிஸ்ஸ்கிக்’ என்னும் பாடல் வெளியிடப்பட்டது.

By Kalyani Pandiyan S
Nov 25, 2024

Hindustan Times
Tamil

தொகுப்பாளர்கள் சிலவற்றின் பெயர்களைச் சொல்லி, அதற்கான பதில்களை ராஷ்மிகாவிடம் வாங்கினர்.

கீதா கோவிந்தம் என்ற பெயரைச் சொன்ன போது.. அது ஸ்பெஷல் ஃபிலிம்.. என்றார். 

தொடர்ந்து புஷ்பா என்று சொன்ன போது, ஒன் அண்ட் ஒன்லி ஃபிலிம் என்றும்.. அல்லு அர்ஜூன் தி ஒன் அண்ட் ஒன்லி என்றும் கூறினார். 

தொடர்ந்து உங்கள் காதலன் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்ட போது, அவர் கொஞ்சம் கோபக்காரகாகவும் இருக்க வேண்டும், அன்பாளராக இருக்க வேண்டும் என்றார். 

அவர் பணக்காரராகவோ, பெரிய அளவில் அழகாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை

. மனது மட்டும் பிடித்து இருந்தால் போதும் என்றார்.

 மேலும் பேசிய அவர், நான் கல்யாணம் செய்து கொள்ளும் நபர் குறித்து எல்லோருக்கும் தெரியும். புஷ்பா 2 திரைப்படம் வந்த உடன் அதற்கான பதில் உங்களுக்கு கிடைக்கும்” என்று பேசினார்.

குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!