’நெத்தி நிறைய பட்டை!’ ராகுல் காந்தியா இது? பரபரப்பு படத்தால் பாஜகவினர் அதிர்ச்சி!

By Kathiravan V
Feb 03, 2024

Hindustan Times
Tamil

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பாரத் நியாய் யாத்திரையை மணிப்பூரில் தொடங்கி மும்பை வரை மேற்கொண்டு வருகிறார்

வடகிழக்கு மாநிலங்களை கடந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை யாத்திரை அடைந்தபோது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜார்கண்ட் மாநிலத்தில் புதிய முதல்வராக பதவியேற்ற சம்பாய் சோரனுடன் யாத்திரை மேற்கொண்டார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பாபா பைத்யநாத் தாம் கோவிலில் யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார். 

ராகுல் காந்தி சிவலிங்கத்திற்கு பூஜை செய்வது தொடர்பான படங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார்.

நெற்றி நிறைய திருநீறுடன் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பதிவிட்டதுடன், ஓம் நமச்சிவாயா என்றும் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில், சிவன் கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு நடத்தி உள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

ஹீமோகுளோபின் முதல் எண்ணற்ற நன்மைகளை தரும் பானம்!