’விருச்சிகம் ராசிக்கு புதிய தொழிலால் பணம் கொட்டும்!’ ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025

By Kathiravan V
Nov 21, 2024

Hindustan Times
Tamil

18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.

மாய சிந்தனையை உருவாக்கும் நிலையை ராகு பகவானும், ஞான சிந்தனையை உருவாக்கும் நிலையை கேது பகவானும் அளிக்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களும் இருக்கும் வீட்டின் உடைய அதிபதியின் பலன்களை தரும் தன்மைகளை பெற்று உள்ளன.

விருச்சிகம் ராசிக்கு 11ஆம் இடத்தில் இருந்து வந்த கேது பகவான் 10ஆம் இடத்திற்கு இடம்பெயர உள்ளார். 5ஆம் இடத்தில் இருந்து வந்த ராகு பகவான் 4ஆம் இடத்திற்கு இடம்பெற உள்ளார். 

ராகு பகவானால் உயர்நிலை கல்வி பயில்வதில் சில தடைகள் வரலாம். நீண்ட நாட்களாக விற்காத நிலங்கள், வீடுகளை லாபத்திற்கு விற்பனை செய்வீர்கள். கடன், நோய் உள்ளிட்ட பிரச்னைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக தீராத நோய்கள் தீரும். 

தொழில் இல்லாதவர்களுக்கு புதிய தொழில்கள் கிடைக்கும். வேலை சார்ந்த விஷயங்களில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் தீரும். மாற்று வழியில் வருமானம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த தகராறுகள் முடிவுக்கு வரும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். 

சிலர் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய வாகனங்களை விற்பனை செய்துவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். போக்குவரத்து சார்ந்த தொழில்களில் உள்ளவர்களுக்கு லாபமும், ஆதாயமும் கிடைக்கும். தொழில்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். 

மனதை உருத்திய தேவையில்லாத எண்ணங்கள் வராது. சுகமான வாழ்கைக்கான வசதிகள் அமையும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு வசதி வாய்ப்புகள் பெறுகும். விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிகள் உண்டாகும். 

ஆன்மீக சிந்தனைகள் கூடும். குடும்பத்தினர் உடன் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இழந்ததை மீட்டெடுக்கும் காலமாக ராகு கேது பெயர்ச்சி இருக்கும். 

சங்கு பூ தேநீர் தரும் நன்மைகள்