’கும்பம் ராசிகு இடமாறும் ராகு! குறி வச்சா இர விழனும்!’ அசுர பலம் பெறும் 2 ராசிகள்! இனி ஜாக்பாட்தான்!
By Kathiravan V Nov 25, 2024
Hindustan Times Tamil
ஜோதிடத்தில், ராகு கேது ஆகிய இரு கிரகங்களும் நிழல் கிரகங்களாக வகைப்படுத்தப்படுகின்றது. ராகு பகவான் ஆனவர் மாயை நிறைந்த பாவ கிரகமாக உள்ளார். இந்த இரு கிரகங்களும் நேர் கடிகார திசையில் பயணிக்காமல், எதிர் கடிகார திசையில் பயணிக்கும் தன்மை கொண்டது.
2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அன்று மாலை 05:08 மணிக்கு மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு ராகு பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி எந்தெந்த ராசிகளில் சாதகமான பலனைத் தரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி ஆனது சில உடல்நலம் சார்ந்த பிரச்னைகளை தரலாம். இருப்பினும் சக ஊழியர்களின் உதவியால் முக்கியமான திட்டங்களில் வெற்றிகளை பெறுவீர்கள். சட்டப் பணிகளில் வெற்றி கிடைக்கும். நிதி ரீதியாக சிறந்த முன்னேற்றங்கள் கிடைக்கும்.
குழந்தைகள் மூலம் பெருமை அடைவீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் மூன்றாவது வீட்டில் சஞ்சரிப்பார். மூன்றாம் இடம் என்பது ஜோதிடத்தில் தைரிய, வீரிய, சகோதர ஸ்தானத்தை குறிப்பது ஆகும். ராகு கும்ப ராசிக்கு சஞ்சரிப்பது தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
இந்த பெயர்ச்சியால் இதுவரை இருந்து வந்த நிதி பிரச்சனைகள் நீங்கும். பணம் சம்பந்தமான பிரச்னைகள் தீர்ந்து நிம்மதி கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றப் பாதை திறக்கும். உத்யோகத்தில் முன்னேற்ற பாதைகள் அமையும்.