உயிரை கொல்லும் டெங்கு காய்ச்சல்  பற்றி தெரியாத விஷயங்கள்!

By Kathiravan V
Nov 25, 2024

Hindustan Times
Tamil

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் ஆர்போவைரஸ் வகையைச் சேர்ந்த டெங்கு வைரஸ் ஆனது ஏடிஸ் எனப்படும் கொசுவால் பரவுகிறது.

டெங்கு காய்ச்சல் ஆனது ஏடிஸ் காய்ச்சல், போகட் காய்ச்சல், டான்டி காய்ச்சல், சோலார் காய்ச்சல், ஸ்டிஃப்நெக் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சலை உண்டாக்க கூடிய ஏடிஸ் கொசு பகலில் தான் கடிக்கும்.

உலகளவில் ஆண்டு தோறும் 5 முதல் 10 கோடி பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்கங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் கூடுவது வழக்கம்.

டெங்கு காய்ச்சலின் இரண்டாம் கட்ட பாதிப்பில் ஈறுகளில் ரத்தம் வடிதல், நடுநெற்றியில் லி, கண்களுக்குப் பின்னால் வலி, தொண்டை வலி, ரத்தக் கசிவு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

இரத்த வெள்ளை அணுக்களில் பிளேட்டுக்கள் குறைதல் போன்ற ஆபத்துக்களை உண்டாக்குவதால் தொடக்கத்தில் காய்ச்சல் குறைந்தாலும், மீண்டும் தீவிரமடைகிறது.

சரியான நேரத்தில் இந்த பாதிப்பு கண்டறியப்படாவிட்டால், வயிறு மற்றும் மூளையில் இரத்தப்போக்கு மரணத்திற்கு வழிவகுக்கும். மூன்றாவது கட்டத்தில், சுயநினைவு இழக்க நேரிடலாம்.

டெங்கு காய்ச்சலை முன்கூட்டியே கண்டறியாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். முதன்மையாக ரத்த தட்டை அணுக்கள்  குறைந்து மரணம் ஏற்படும் அபாயம் உள்ளது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்