’உங்கள் வீட்டில் இந்த படங்கள் இருந்தால் ஆபத்து!’ பூஜை அறையில் வைக்க கூடாத சுவாமி படங்கள் இதோ!
By Kathiravan V Sep 25, 2024
Hindustan Times Tamil
பொதுவாக நாம் வீடு கட்டும் போதே கடவுளுக்காக என்று தனி இடம் ஒதுக்கி பூஜை அறையை கட்ட வேண்டும். அப்படி கட்ட இயலாதவர்கள் தனியாக மரத்தில் செய்யப்படும் கதவு உடன் கூடிய பூஜை அறையை பயன்படுத்தலாம்.
எவ்வளவு பழமையான படங்களாக இருந்தாலும் அது உடைந்து இருந்தால் அதனை உடைந்த நிலையில் வழிபாடு செய்யக் கூடாது. அதனை சரி செய்து பூஜை செய்வது உத்தமம். சிதிலம் அடைந்து உள்ள விக்கிரகங்களை நீர்நிலைகளை சேர்ப்பது நமது மரபு ஆகும்.
பூஜை அறையில் பிரம்மச்சாரி கடவுள்களான ஆஞ்சநேயர் மற்றும் ஐயப்பன் படங்களை வைக்க கூடாது. அப்படி வைக்கும் பட்சத்தில் தீட்டு படாத இடத்தில் இந்த படங்களை வைக்க வேண்டும்.
காளி, மகிஷாசூர மர்த்தினி, சரபேஸ்வரர், பிரத்யங்கிரா தேவி, உக்கிர நரசிம்ம மூர்த்தி ஆகிய தெய்வங்களை வைக்க கூடாது என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இந்த தெய்வங்கள் கையில் ஆயுதம் எடுத்து கோபம் கொண்டதற்கு காரணமே தன்னை நம்பிய பக்தர்களை காக்க வேண்டும் என்ற கருணையோடுதான் என்பதால் இந்த தெய்வங்களை தாராளமாக வழிபடலாம். ஆனால் அதற்கு ஏற்ற வகையில் வழிபாடு செய்ய வேண்டும்.
குலதெய்வங்களுக்கு படம் இருக்கும் போது, அதை பூஜை அறையில் வைத்து வழிபடலாம். படம் இல்லாத குலதெய்வத்தை வழிபாடு செய்பவர்கள் தினமும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்து சிறப்பு.
குடும்பத்தில் மறைந்த முன்னோர்களின் படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுவது தவிர்க்க வேண்டும்.
நவக்கிரங்கள் மற்றும் சனி பகவான் உள்ளிட்டோரின்படங்களை தவிர்க்க வேண்டும்.
அக்டோபர் 05-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்