எப்போதும் புத்துணர்ச்சி மிக்க மனநிலையில் இருக்க நீங்கள் பணி செய்யும் இடத்தில் வைக்க வேண்டிய செடிகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Sep 13, 2024

Hindustan Times
Tamil

டிஜிட்டல் கேட்ஜெட்களை நீண்ட நேரம் பார்ப்பதால் கண்களுக்கு ஏற்படும் எரிச்சலை குறைத்து, ரிலாக்ஸ் மனநிலையை ஏற்படுத்துவதில் பச்சை பசேல் என இருக்கும் செடி வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன

வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ நீங்கள் பணி செய்யும் இடத்தில் சில செடி வகைகள் வைப்பதன் மூலம் சோர்வு அடையாமல் விரைவில் மீள்திறனை பெறுவீர்கள் 

இஸட்இஸட் என்ற செடிகள் அதிகம் தண்ணீர் இல்லாமலே வளரக்கூடிய செடியாக உள்ளது. அத்துடன் சூரிய வெளிச்சம் தேவைப்படாமல் உட்புற வெளிச்சத்தில் கூட நன்றாக வளரும். இதன் பளபள பச்சை நிற கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது

சிறிய தோற்றத்தில் இருக்கும் ஜீப்ரா காக்டஸ் குறைவான பராமரிப்பு கொண்ட செடியாக இருக்கிறது. வரிக்குதிரை போல் வரிகளை கொண்டிருக்கும் இந் செடிகளின் தனித்துவமான வடிவமைப்பு மனதுக்கு ரிலாக்ஸ் உணர்வை தரும்

பன்முகதன்மை கொண்டதாக இருக்கும் ஜேட் செடியில் குண்டான, நீளவட்ட வடிவிலான இலைகள் குறைவான சூரிய வெளிச்சத்திலும் நன்கு வளரும். மனநிலை மாற்ற்ததை ஏற்படுத்துவதில் இந்த செடி முக்கிய பங்கு வகிக்கிறது

பெரிய கத்தி போல் கூர் முனைகளோடு இருக்கும் ஸ்னேக் பிளாண்ட் உங்கள பணியிடத்தை அழகானதாக்குகிறது. இதன் வண்ணன் கண்களுக்கு ரிலாக்ஸ் அளித்து மீள்திறனை அதிகரிக்கிறது

மனநிலை இலகுவாக வைக்க உதவும் முக்கிய செடியாக கற்றாழை இருந்து வருகிறது. குறைவான பராமரிப்பு கொண்ட இந்த செடியை இன்ஸ்டன்ட் சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்

ரத்தன் டாடாவின் பொன்மொழிகள்