Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்இப்படியும் சொல்லிக்கொடுக்கலாம்.. நம்பிக்கையே முக்கியம்
pixa bay
By Pandeeswari Gurusamy Jan 23, 2024
Hindustan Times Tamil
குழந்தைகளை வளர்ப்பது கடினமான ஒன்றுதான், அதற்கு சில வழிமுறைகளை நீங்கள் தெரிந்துகொண்டால், அது அவர்கள் நல்ல நடத்தைகளை உருவாக்கிக்கொள்ள உதவும். உங்கள் குழந்தைகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சில குறிப்புகளை இங்கு பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அவர்களின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு அதிகம் உள்ளது. எனவே குழந்தைகளுக்கு நன்னடத்தைகளை பழக்குங்கள்.
pixa bay
உங்கள் குழந்தையிடம் அன்றாடம் அன்புடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களை பாராட்டுங்கள். கட்டி அரவனைத்து அன்பை பொழியுங்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும். அவர்களின் எல்லைகள் விரிவடையும் அவர்களை ஆளுமைமிக்கவர்களாகவும் மாற்றும்.
pixa bay
உங்கள் குழந்தையிடம் அன்றாடம் அன்புடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களை பாராட்டுங்கள். கட்டி அரவனைத்து அன்பை பொழியுங்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும். அவர்களின் எல்லைகள் விரிவடையும் அவர்களை ஆளுமைமிக்கவர்களாகவும் மாற்றும்.
pixa bay
உங்கள் அன்பில் எந்த நிபந்தனைகளும் இல்லை. உங்கள் அன்பு நிபந்தனையற்றது என்று உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் அவர்களை திருத்துவது முக்கியமாக இருந்தபோதும், அவர்களுக்கு உங்கள் அன்பின் ஆழமும், வகையும் கட்டாயம் தெரியவேண்டும். அவர்களுக்கு அந்த அன்பு பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் அந்த அன்பு அமையவேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு நீங்கள் செயல்படவேண்டும்.
pixa bay
உங்கள் குழந்தைகளுக்கான விதிகளை வகுப்பது மிகவும் அவசியம். அந்த விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். இது உங்கள் குழந்தைக்கு ஒரு கட்டமைப்பை உருவாக்கித்தரும். அந்த கட்டமைப்பு, அவர்களுக்கு ஒரு வழக்கத்தை கொண்டுவரும். அதில் உங்களை ஒரு வழிகாட்டியாக காடிக்கொள்ளுங்கள்.
pixa bay
நீங்கள் ஒருவரோடு ஒருவர் தரமான நேரத்தை செலவிடவேண்டும். அது உங்கள் குழந்தைகளுடன் ஒரு பிணைப்பை உருவாக்கித்தரும். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுங்கள். உங்கள் குழந்தைகளுடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
pixa bay
உங்கள் குடும்ப விதிகள் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதுடன், அவற்றை எளிமையாக்குங்கள். ஒவ்வொன்றுக்கும் தெளிவான விளக்கங்களை கொடுத்துவிடுங்கள்.
pixa bay
உங்கள் குழந்தைகளிடம் எப்போது நேர்மறை எண்ணங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அவர்களிடம் எதிர்மறையான எதையும் பேசாதீர்கள். நல்ல பழக்க வழக்கங்களை அவர்களிடம் விதைத்து எடுப்பதில், அவர்களின் நற்பழக்கவழக்கங்களை பாராட்டுவதும், அதற்கு பரிசு கொடுப்பது அல்லது அங்கீகரிப்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
உங்கள் வீட்டில் அதிகாரமான பெற்றோர இருக்கும்போதுதான் உங்களால் நல்ல நடத்தை உள்ள குழந்தைகளை வளர்த்தெடுக்க முடிகிறது. திறந்த மனதுடனான உரையாடல், தெளிவான விதிகள், பாசம், அன்பு, பற்று ஆகியவை உங்கள் குழந்தைகளை பிரச்னைகளை தீர்க்கும் குணம் நிறைந்தவர்களாக வளர்த்தெடுக்கும். இது ஒரு ஆரோக்கியமான பெற்றோர்-குழந்தை உறவை வளர்த்தெடுக்கும்.
pixa bay
தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!