Parenting Tips : கண்காணிப்பு, கடுமை, சுதந்திரம் குழந்தைகளை வளர்ப்பது எது? எந்த வகை பெற்றோராக நீங்கள் இருந்தால் நல்லது?

By Priyadarshini R
Oct 30, 2023

Hindustan Times
Tamil

ஜெல்லி மீன் பேரன்டிங் என்றால் என்ன? இது ஒரு அமைதியான வழியில் உள்ள பேரன்டிங் முறை. ஜெல்லி மீன் பெற்றோர்கள் எதையும் எளிதாக எடுத்துக்கொண்டு ஈசி கோயிங்காக இருப்பார்கள். தளர்வான கட்டுப்பாடுகளுடன் இருப்பது அவர்களின் ஸ்டைல். இது அவர்களின் குழந்தைகளை தங்களின் சொந்த கருத்துக்களை வடிவமைக்க வழிவகுக்கிறது.

அவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள குழந்தைகளை அனுமதித்தல் இந்த முறை பேரன்டிங் ஏன் ஜெல்லி மீன் பேரன்டிங் என்று அழைக்கப்படுகிறது என்றால், ஜெல்லி மீன் என்ற கடல் வாழ் உயிரினம், அதன் நெகிழ்தன்மைக்கும், அது இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு ஏற்றுக்கொள்வதற்கும் புகழ்பெற்றது. இந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் அனுபவங்கள் மற்றும் தவறுகளில் இருந்து பாடம் கற்று முன்னேற்றம் அடைய செய்ய வழிகாட்டுவார்கள்.

உணர்வுப்பூர்வமாக ஆதரவு இந்த வகை பேரன்டிங் உணர்வுப்பூர்வமான ஆதரவு மற்றும் அனுதாபம் கொள்வது குறித்து பேசுகிறது. எனவே இதில் திறந்த உரையாடல் இருக்கும். பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் இடையே இருவரும் ஒருவரையொருவர் மதிப்பர்.

அதிக சுதந்திரம் குறைவான ஒழுக்கம் இந்திய பேரன்டிங் முறையில் குடும்ப படிநிலைகளை பின்பற்ற வேண்டியிருக்கும். நிறைய ஒழுக்கம் போதிக்கப்படும். ஆனால் ஜெல்லி மீன் ரேன்டிங்கில் குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கப்படும். அவர்களின் தேவைகளை அவர்கள் சரியாக வழியில் தேடி அடையவேண்டும் என்பது விதியாக இருக்கும்.

லாக்ஸர் அணுகுமுறை ரிலாக்ஸான முறையாக கருதப்படும் ஜெல்லி மீன்கள் பேரன்டிங்க முறையில், வளர்க்கப்படும் குழந்தைகள் அறிவாளிகளாக இருப்பார்கள். சுயமானவர்களாக தாங்களாகவே தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

திறந்த உரையாடல் ஜெல்லி மீன் ரேன்டிங்கில் திறந்த உரையாடல் நிச்சயமாக இருக்கும். உணர்வுப்பூர்வமான ஆதரவும் இருக்கும். பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையில் பிணைப்பு, இணைப்பு என அனைத்தும் இருக்கும். அதற்கு காரணம் இந்த திறந்த உரையாடல்தான்.

முடிவெடுக்கும் திறன் இந்த ஜெல்லி பேரன்டிங் முறையில் குழந்தையின் சுதந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. சுய நிர்ணயத்திறன் மற்றும் அவர்களின் முடிவுகளை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் திறன் என அனைத்தும் குழந்தைகளுக்கு வழங்கப்படிருக்கும். அவர்கள் சரியான முடிவை எடுக்க கற்றுக்கொடுக்கப்பட்டிருப்பார்கள்.

சுய உறுதி ஜெல்லி மீன் பேரன்டிங்குடன், பாரம்பரிய மதிப்பீடுகளை இணைத்து இந்திய பெற்றோர்கள், தன்னம்பிக்கை நிறைந்த குழந்தைகளை வளர்க்க உதவுகிறது. இந்த மாறும் உலகில் ஏற்படும் மாற்றங்களை அவர்கள் எதிகொள்ள பழக்குகிறது. உணர்வுப்பூர்வமாக உறுதியானவர்களாகவும் வளர்தெடுக்கிறது.

கருத்துக்களை வெளிப்படுத்துவது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி, எந்த எல்லைகளும் இல்லாமல் குழந்தைகள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவும், அவர்களின் யோசனைகள், கருத்துக்கள், உணர்வுகளை வெளியில் தயக்கமின்றி கூற கற்றுக்கொடுக்கிறார்கள். ஜெல்லி மீன் பெற்றோர் உருவாக்கும் இந்த சூழல் குழந்தைகளுக்கு மேலும் தன்னம்பிக்கையை வழங்குகிறது.

அதிகாரம் நிறைந்த பேரன்டிங்கை தடுக்கிறது இந்திய பேரன்டிங் முறையில் பெற்றோர் வீட்டில் அதிகாரமிக்க நபர்களாக கருதப்படுகிறார்கள். அதனால் அவர்கள் வீட்டில் பல்வேறு விதிகளை வகுக்கிறார். குழந்தைகளை கட்டுப்படுத்தி வளர்க்கிறார்கள். ஆனால் இந்த முறையில் குழந்தைகள் தவறு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதிலிருந்து அவர்கள் பாடங்கள் கற்று முன்னேறவேண்டும். இதனால் குழந்தைகள் தவறுகள் குறைகிறது. அவர்கள் நிறைய கற்கிறார்கள்.

ஜெல்லி மீன்கள் பேரன்டிங் நன்மையுள்ளதா? ஹெலிகாப்டர் வகை பெற்றோர்கள் எப்போது தங்கள் குழந்தைகளை கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். அத்தாரிட்டேரியன் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு இருப்பார்கள். குழந்தைகளுக்கு தண்டனைகளையும் வழங்குவார்கள். ஆனால் ஜெல்லி மீன் பேரன்டிங்கில் நிறைய சுதந்திரம் இருக்கும். இதனால் குழந்தைகள் அறிவாளிகளாகவும், வெற்றியாளர்களாகவும், சுய உறுதி கொண்டவர்களாகவும் வளர்க்கப்படுகிறார்கள் எனவே எந்த பேரன்டிங் நல்லது என்று நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.