Parenting Tips : வேலை தேடும் குழந்தைகளுக்கு எப்படி உதவலாம்? இதோ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

By Priyadarshini R
Jan 24, 2024

Hindustan Times
Tamil

உங்களின் ரெஸ்யூம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு நல்ல ரெஸ்யூமை அவர்கள் உருவாக்கவேண்டும். அவர்களின் திறன்கள், திறமைகள், அனுபவங்கள், சாதனைகள் என அவை அடக்கியிருக்க வேண்டும். 

இந்த காலத்தில் வேலை தேடுவது மிகவும் எளிதான ஒன்றுதான். அதற்கு ஆன்லைன் மிகவும் உதவியாக உள்ளது. அது மட்டுமின்றி அவர்கள் வெளியே சென்றும் வேலை தேடவேண்டும். அவர்கள் முன்னாள் மாணவர்கள் சங்கம் வழியாக, அவர்களின் நண்பர்கள் அல்லது உங்கள் நண்பர்கள் வழியாக என்று அவர்கள் வேலை தேடவேண்டும். 

உங்கள் வளர்ந்த குழந்தைகளை அவர்கள் விரும்பும் துறையில் உள்ள நிபுணர்களுடன் தொடர்பு ஏற்படுத்திவிடுங்கள். நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் போன்றவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதைவிட நிபுணர்களிடம் செல்வதுதான் சிறந்தது.

அவர்களின் ரெஸ்யூம்களுடன் இணைக்கப்படும் கடிதங்களை பிரத்யேகமான முறையில் தயாரிக்க கற்றுக்கொடுங்கள். குறிப்பிட்ட வேலைக்கு அவர்கள் விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு சரியான கடிதங்களை வைத்தால்தான் அது சிறப்பாக இருக்கும். 

அவர்களுக்கு வீட்டிலேயே நேர்முகத்தேர்வுகள் நடத்தி பயிற்சி கொடுங்கள். அப்போதுதான் அவர்கள் நேர்முகத்தேர்வில் சிறப்பாக பங்குபெற முடியும்.

வேலை தேடும்போது அவர்கள் கட்டாயம் வேலை கிடைப்பது குறித்து மனதளவில் கொஞ்சம் படபடப்புடன் இருப்பார்கள். எனவே அவர்களின் சிறிய சாதனைகளையும் கொண்டாடுங்கள். அவர்களுக்கு நேர்மறையான உறுதியைக்கொடுங்கள், சவால்களை புரிந்துகொள்ளுங்கள்.

இருவரும் சேர்ந்து வேலை தேடும் திட்டத்தை செய்யலாம் என்று அவர்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள். அவர்களுக்கென்று இலக்குகள், காலக்கெடு, திட்டங்களை வகுத்துக்கெள்ளுங்கள்.

உங்கள் இளம் குழந்தைக்கு பல்வேறு துறைகள் குறித்தும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களின் பலம், ஆர்வம், மதிப்பு, ஆளுமையை பொருத்து அவர்களுக்கு எது ஒத்துவரும் என்பதை அவர்கள் தேர்ந்தெடுக்க அது உதவியாக இருக்கும். 

தொடர்ந்து கற்பதை ஊக்குவியுங்கள். ஆன்லைன் கோர்ஸ்கள், பயிற்சி பட்டறைகள், வெபினர்கள், பாட்காஸ்களை பயன்படுத்தி அவர்கள் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள ஊக்குவியுங்கள். 

நீங்கள் அவர்களுக்கு வழிகாட்டலாம். அது அவர்களுக்கு அவசியமான ஒன்றுதான் என்றாலும், அவர்கள் சுயமாக செய்யும் எதையும் மதியுங்கள். அவர்களுக்கு தேவைப்படும்போது உதவுங்கள். 

மணிரத்னத்துடன் ஏற்பட்ட மனஸ்தாபம் குறித்து மாணிக்கம் நாராயணன்!  “நீங்கள் ஒரு படத்தை எடுத்தீர்கள். அந்த படத்தை நான் ஒரு பெரிய விலை கொடுத்து வாங்கினேன். அந்தப்படம் பெரிதாக ஓட வாய்ப்பு இல்லை என்று ரிலீஸூக்கு முன்பே நான் கணித்தேன். இருப்பினும், என்னுடைய தரப்பில் எந்தவித குறையும் வந்து விடக்கூடாது என்பதற்காக, படத்திற்கான முழு பணத்தையும் உங்களிடம் கொடுத்தேன்.”