மணிரத்னத்துடன் ஏற்பட்ட மனஸ்தாபம் குறித்து மாணிக்கம் நாராயணன்!  “நீங்கள் ஒரு படத்தை எடுத்தீர்கள். அந்த படத்தை நான் ஒரு பெரிய விலை கொடுத்து வாங்கினேன். அந்தப்படம் பெரிதாக ஓட வாய்ப்பு இல்லை என்று ரிலீஸூக்கு முன்பே நான் கணித்தேன். இருப்பினும், என்னுடைய தரப்பில் எந்தவித குறையும் வந்து விடக்கூடாது என்பதற்காக, படத்திற்கான முழு பணத்தையும் உங்களிடம் கொடுத்தேன்.” 

By Kalyani Pandiyan S
May 13, 2024

Hindustan Times
Tamil

அதில், ஒரு பத்து லட்ச ரூபாய்க்கான காசோலையை மட்டும்  படம் ரிலீஸ் ஆன அடுத்த நாள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிக்கொடுத்தேன். படம் ரிலீஸ் ஆனது; படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் கடுமையான விமர்சனம் வந்து சேர்ந்தது. அந்தப்படம் மணி இயக்கிய  கன்னத்தில் முத்தமிட்டால்

அந்த சமயத்தில், எனக்கு கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் அளவிற்கு  நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக அவர்கள் தரப்பு நஷ்ட ஈடாக வெறும் 20 லட்சம் மட்டுமே கொடுத்தார்கள். 

இது நடந்து பல வருடங்கள் கழித்து, அவர் இயக்கிய ஒரு படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை நான் வேண்டுமென்று கேட்கிறேன். அதற்கான பணத்தையும் நான் கொடுக்க தயாராக இருந்தேன். 

அது குறித்து பேச, அவரிடம் அப்பாயின்மென்ட்டும் கேட்டிருந்தேன். அதற்கு அவர் எந்தவித பதிலும் எனக்கு அளிக்கவில்லை. அவர் என்னை பார்த்து பயப்பட்டார். நான் இறங்கி வந்து உன்னிடம் உதவிக்கு நின்றேன். ஆனால் அந்த உதவியை கூட அவன் செய்யவில்லை.

30, 40 வயதில் உனக்கு ஒரு பிடித்தமான வாழ்க்கை இருக்கும். ஆனால் 60 கடந்தும் கூட, உனக்கு முதிர்ச்சி ஏற்படவில்லை என்றால் நீ எல்லாம் என்ன மனிதன். அந்தப் பெருந்தன்மை கூட அவனுக்கு இல்லை. அந்த அளவுக்கு கூட, இரக்கமில்லாத நீங்கள் எல்லாம் ஏன் இந்த உலகத்தில் வாழ்கிறீர்கள். சாகிற போது காசை அள்ளிக்கொண்ட செல்லப் போகிறீர்கள். 

கை தழுவாததால் உண்டாகும் தீமைகள்