வரும் 2025ஆம் ஆண்டில் திடீர் கோடீஸ்வர யோகம் பெரும் 7 ராசிகள்! பணத்தை மூட்டை கட்ட ரெடியா?
By Kathiravan V Sep 08, 2024
Hindustan Times Tamil
ஒவ்வொரு ஆண்டு பிறப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆண்டுதோறும் பல கிரக நிலைகள் மாறுவது வழக்கம். வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் ராகு, கேது பெயர்ச்சி நடைபெறுகின்றது. அடுத்துவரும் ஏப்ரல் மாதம் குரு பெயர்ச்சி நடைபெறுகின்றது.
மீனம் ராசியில் உள்ள ராகு பகவான் கும்பம் ராசிக்கும், கன்னி ராசியில் உள்ள கேது பகவான் சிம்மம் ராசிக்கும் இடம் பெயர உள்ளனர்.
ரிஷபம் ராசியில் தற்போது இருக்கும் குரு பகவான் மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
2025ஆம் ஆண்டில் மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் பிறந்தவங்களுக்கு கோடீஸ்வர யோகம் உண்டு. லாப ஸ்தானம் எனப்படும் 11 ஆம் வீட்டில் கோச்சாரத்துல ராகு பகவான் செல்ல உள்ளார். லாப ஸ்தானத்தில் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால்தான் வருமானம் கிடைக்கும். ராகு பகவான் லாப ஸ்தானத்துடன் சம்பந்தப்பட்டு இருந்தால் திடீர் வருமானம், திடீர் யோகம், திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ஒரே இரவில் பணக்காரர் ஆகும் யோகம் ராகு பகவான் மூலமே உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் மிகப்பெரிய பணத்தை தரும் கிரகம் ஆக ராகு உள்ளார். குரு பகவான் மிதுனம் ராசிக்கு இடம்பெயர்வதால் முயற்சி ஸ்தானம் வலுப்பெறும். ஒருவர் எடுக்கும் முயற்சி வெற்றியா தோல்வியா என்பது எந்த கிரகம் உள்ளதை பொறுத்தே தீர்மானிக்கப்படும். குரு பகவானின் ஆதரவு உள்ளதால் முயற்சிகள் வெற்றி பெறும்.
ரிஷபம் ராசி அல்லது ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2025ஆம் ஆண்டில் கோடீஸ்வர யோகம் உண்டு. ரிஷபம் ராசிக்கு 10ஆம் வீடு எனப்படும் தொழில் ஸ்தானம் ஆன கும்பம் ராசிக்கு ராகு பகவான் வருகிறார். 10ஆம் வீட்டில் பாவி கிரகம் இருப்பது ஜாதகருக்கு நன்மைகளை தரும். தொழில் இல்லாதவர்களுக்கு புதிய தொழில்கள் அமையும். நீண்டகாலமாக தொழில் தொடங்க நினைத்தவர்கள் தொழில் தொடங்கும் வாய்ப்புகள் ஏற்படும். குரு பகவான் மிதுனம் ராசிக்கு இடம்பெயர்வதால் பெரும் அளவு பணம் வருவதற்கான அதிக வாய்ப்புகள் ஏற்படும்.
2025ஆம் ஆண்டில் மிதுனம் ராசி மிதுனம் லக்னத்திற்கு கோடீஸ்வர யோகம் உண்டு. உங்கள் ராசிக்கு குரு பகவான் வருவதால் நன்மைகள் கிடைக்கும். குரு பலன் வலுவாக உள்ளதால் திருணத்தடைகள் நீங்கும், தொழில், வேலை, வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்தில் ராகு வருவதால் திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத பாக்கியம் ஆகியவை கிடைக்கும். முற்பிறவிகளில் செய்த நல்ல விஷயங்களுக்கு உண்டான நற்பலன்கள் இதன் மூலம் உண்டாகும்.
சிம்மம் ராசி மற்றும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் குரு பகவான் வருகிறார் என்பதால் பணவரவு அதிகம் இருக்கும். பலவழிகளில் வருமானம் வருதற்கான சூழ்நிலைகளை குரு பகவான் ஏற்படுத்தி தருவார். பூர்வீக சொத்துக்கள் மூலம் பணம் ஈட்டும் வாய்ப்புகள் உண்டாகும். 7ஆம் பாவத்தில் ராகு வருவதால் புதிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும். தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள்.
வரும் 2025ஆம் ஆண்டில் திடீர் கோடீஸ்வர யோகம் பெரும் 7 ராசிகள்! பணத்தை மூட்டை கட்ட ரெடியா?
வரும் 2025ஆம் ஆண்டில் திடீர் கோடீஸ்வர யோகம் பெரும் 7 ராசிகள்! பணத்தை மூட்டை கட்ட ரெடியா?
கன்னி ராசி மற்றும் கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வர யோகம் உண்டு. தொழில் ஸ்தானத்தில் குரு பகவான் வருகிறார் என்பதால் தொழில் சிறக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் மேலும் தொழிலை விரிவு செய்வீர்கள்.
கும்பம் ராசி மற்றும் கும்பம் லக்னத்திற்கு கோடீஸ்வர யோகம் உண்டு. கும்பம் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு குரு பகவான் வருவதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். எடுக்கும் செயல்களில் வெற்றிகள் கிடைக்கும். ராசி மற்றும் லக்னத்தில் ராகு பகவான் வருவதால் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் ஏற்பட்டாலும் குரு பகவான் பார்வையால் வெற்றிகள் கிடைக்கும்.
துலாம் ராசி மற்றும் துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வர யோகம் உண்டு. பாக்கிய ஸ்தானம் ஆன 9ஆம் வீட்டில் குரு பகவான் வருவதால் முன் ஜென்ம வினைகளுக்கான நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். 5ஆம் வீட்டிற்கு வரும் ராகு பகவான் மூலம் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் நல்லபடியாக கிடைக்கும்.