நரைமுடி என்பது தற்போது சாதரணமான விஷயமாகிவிட்டது.  வயது வித்தியாசமின்றி நரை முடி ஏற்படுவது சிலருக்கு மனஉளைச்சலை தருவதாகவே உள்ளது. இயற்கையான வழிகளில் நரை முடியை கருமையாக்குவது பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
May 31, 2023

Hindustan Times
Tamil

தலைமுடியின் ஊட்டத்துக்கு தேவைப்படும் பிரதான எண்ணெய்யாக தேங்காய் எண்ணெய் உள்ளது

தேஙகாய் எண்ணெய்யில் ஈரப்பதம், பையோடின் மற்றும் இதர ஊட்டங்கள் நிறைந்துள்ளன. இவை நரைமுடிக்கு தீர்வாகவும், தலைமுடியை மிருதுவாகவும் வைக்க உதவுகிறது

தலைமுடிக்கு குளிர்ச்சி, கருமையை தரும் அருமருந்தாக நெல்லிக்காய் உள்ளது

நெல்லிக்காயில் இயற்கையாக உள்ள அஸ்ட்ரின்ஜென்ட், தலைமுடியில் இழந்த கருமை நிறத்தை மீட்டெடுக்க உதவுகிறது. அத்துடன் தலைமுடி ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது

வெங்காய சாறு தலைமுடிக்கு போசக்கு அளிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது

வெங்காய சாற்றில் அதிக அளவிலான ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை இளநரை ஏற்படுவதை தடுப்பதுடன் முடி வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது

தலை முடி வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கும் மூலிகையாக துளசி உள்ளது

வைட்டமின் சி ஆதாரமாக திகழும் துளசியில் நரைமுடியை கருமையாக்கும் தன்மை கொண்டதாக உள்ளது

பிளாக் டீ நரைமுடி ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதாக பலருக்கும் தவறான எண்ணம் உள்ளது. மாறாக இது நரைமுடியை கருமையாக்கு தன்மையை அதிகமாக கொண்டுள்ளது

அதிக அளவிலான டேனிக் அமிலத்தை கொண்டிருக்கும் பிளாக் டீ, தலைமுடி கருமையாவதற்கு உதவுகிறது   

வெள்ளரிக்காய் செய்யும் நன்மைகள்