முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்க இந்த வீட்டுமுறை வைத்தியத்தை முயற்சித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Sep 17, 2024

Hindustan Times
Tamil

முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவது பொதுவான விஷயம். கரும்புள்ளிகளைப் போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆக்க வேண்டும். இதை முகத்தில் கரும்புள்ளிகள் மீது தடவினால் நிவாரணம் பெறலாம்

சிறிது அளவு தண்ணீரில் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து, காட்டன் துணியை அதில் லேசாக நனைத்து, முகத்தில் கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவினால் மெல்ல காணாமல் போகும்

தேன் மற்றும் இலவங்கப்பட்டை தூள் ஆகிய இரண்டையும் நன்கு கலந்து, இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஒரு துண்டு அல்லது துணியை வைத்து முகத்தை கவர் செய்து அந்த ஆவியை கரும்புள்ளி பகுதிகளில் பட வைக்க வேண்டும் 

ஓட்மீலை பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிட்டு முகத்தை கழுவினால் பலன் பெறலாம் 

ஒரு கப் க்ரீன் டீயை காய்ச்சி ஆறவிடவும். அந்த க்ரீன் டீயில் காட்டன் துணியை நனைத்து கரும்புள்ளிகள் மீது தடவவும்

ವಿಶೇಷ ಸೂಚನೆ: ಇಲ್ಲಿ ನೀಡಲಾಗಿರುವ ಮಾಹಿತಿಯು ಕೇವಲ ತಿಳುವಳಿಕೆಗಷ್ಟೆ ನೀಡಲಾಗಿದೆ. ಚರ್ಮದ ಏನೇ ತೊಂದರೆಯಿದ್ದರೂ ತಜ್ಞ ವೈದ್ಯರನ್ನು ಸಂಪರ್ಕಿಸುವುದು ಸೂಕ್ತ. 

freepik

காபியில் எலுமிச்சம்பழம் கலந்து பருகுவது உடல் எடையை குறைக்க உதவுமா?