Moringa Benefits: குழந்தையின்மை, ஆண்மையை  பிரச்சனையா.. முருங்கை கீரை மட்டும் சாப்பிட்டு பாருங்க!

Pexels

By Pandeeswari Gurusamy
Mar 25, 2024

Hindustan Times
Tamil

முருங்கைக்கீரையை அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்கும் ஒரு கீரை. இதில் இரும்புச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. 

pixa bay

இதை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தால் அது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. அது மட்டுமின்றி பல்வேறு சத்துக்களும் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் பி, பி2, சி ஆகிய சத்துகளும் நிறைந்துள்ளன.

Pexels

முருங்கையின் கீரை மட்டுமின்றி அதன் பூவையும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இதனால் உடல் பலம் அதிகரிக்கும். எலும்புகளும், பற்களும் வலுப்பெற உதவுகிறது. கண் கோளாறுகள், பித்தம் தொடர்பான நோய்களில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. முருங்கையின் தண்டும் மருத்துவ குணம் நிறைந்தது.

Pexels

இருமல், சளித்தொல்லைகளில் இருந்து விடுபடவும் முருங்கைக்கீரை உதவுகிறது. இந்தக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. உடல் வலிக்கு முருங்கைக்கீரையில் ரசம் அல்லது சூப் வைத்துக் குடித்த்தால் நல்லது.

Pexels

குழந்தை பெற்றவர்களுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. முக்கியமாக தாய்ப்பால் ஊறுவதற்கு முருங்கைக்கீரை உதவுகிறது. எனவே பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டு வந்தாலே, குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கும்.

Pexels

குழந்தையின்மை, ஆண்மைக்குறை பிரச்னை உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சாப்பிடுவதால் நன்மை கிடைக்கும். முருங்கைக்கீரை மட்டுமல்லாமல், முருங்கைப்பூவையும் சமைத்துச் சாப்பிடலாம். முருங்கைப்பூவை பாலில் போட்டு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு போதுமான பலம் கிடைக்கும்.

Pexels

அது குழந்தைகளுக்கும் நன்மை கொடுக்கிறது. முக்கியமாக குழந்தைகளின் வயிறு கல் போன்று வீங்கி உப்பிக்கொண்டு தொல்லை கொடுத்தால், மூச்சுத் திணறலையும் ஏற்படும். இதுபோன்ற நேரங்களில் முருங்கைக்கீரையை சமைத்துச் சாப்பிவேண்டும்.

Pexels

எனவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து உங்கள் உடலுக்கு தேவையான நன்மைகளை பெறுங்கள். முருங்கைகீரை மட்டுமின்றி முருங்கைக்காய்கள், விதைகள் மற்றும் முருங்கை கீரையின் தண்டு என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.

pixa bay

நவம்பர் 14-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்