சென்னைக்கு கிழக்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் மிக்ஜாம் புயல் நிலை கொண்டு உள்ள நிலையில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 36 செ.மீ மழை பதிவாகி உள்ள நிலையில் அடையாறு, கூவம் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
விமான ஓடுபாதைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் இன்று இரவு வரை சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
சதுப்புநிலப்பகுதியான சென்னை பள்ளிக்கரணை பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
சென்னையின் பிரதான சாலைகளான அண்ணாசாலை, பூந்தமல்லிசாலை, ஜிஎஸ்டி சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடுகிறது.
மெரினா கடற்கரை முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது
பல்வேறு குடியிருப்புகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அவரச உதவிக்கு 1913 என்ற அவசர எண்ணை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கலகலனெ சிரி கண்ணில் நீர் வர சிரி, நீங்கள் சிரித்து மகிழ இங்கே சில ஜோக்குகள்!