உங்கள் வீட்டு தோட்டத்தை அழகாகவும், மெய்சிலிர்க்கவும் வைக்கும் விதமாக சில கலப்பின செடி வகைகள் உள்ளன
By Muthu Vinayagam Kosalairaman Aug 21, 2023
Hindustan Times Tamil
இரண்டு வெவ்வேறு மலர்களை கொண்ட செடிகளை வைத்து மகரந்த சேர்க்கை மூலம் உருவாகும் பூக்கள் கொண்ட
செடிகள் கலப்பின செடி வகைகளாகும்
இந்த செடிகள் உங்கள் தோட்டத்தின் அழகை மேலும் அழகுபடுத்தி காட்டுகிறது. சில வகை கலப்பின செடிகளை பார்க்கலாம்
நைட் ஸ்கை பெட்டுனியா
பர்ப்பிள் அல்லது வைலட் நிற மலர்களில், வெள்ளை நிற புள்ளிகளோடு இரவு நேரத்தில் நட்சத்திரங்கள் ஜொலிப்பது போல் பார்ப்பதற்கு இந்த நைட் ஸ்கை பெட்டுனியா உள்ளது. அனைத்து வகை மண் வகைகளிலும் நேரடி சூரிய வெளிச்சத்தில் வளரக்கூடிய செடியாக இது உள்ளது
மிட் நைட் ப்ளூ ரோஸ்கள்
உங்கள் தோட்டத்தை அழகாக்கும் செடிவகையை இந்த மிட் நைட் ப்ளூ ரோஸ்கள் உள்ளன. செழிப்பான மணல் மற்றும் நேரடி சூரிய ஒளியில் வளரும் செடி வகையாக இது உள்ளது
பேன்ஸி வயோலா
கண்கவரும் கவர்ச்சியான இதழ்களை கொண்டிருக்கும் இந்த மலர்களை கொண்ட செடிகள் பர்ப்பிள், மெரூன்,மஞ்சள், வெள்ளை நிற ஷேட்களில் மலர்களை கொண்டதாக உள்ளது. தோட்டங்களை வளரக்கூடிய சிறந்த மலர் செடியாக இருந்து வரும் இதை அனைத்து வகை மணல்களிலும் வளர்க்கலாம்
வின்கா பர்பிள்
பர்ப்பிள் மற்றும் வைலட் நிற பூக்கள் வளரக்கூடிய மற்றொரு அழகான பூ செடியாக இது உள்ளது. இந்த பூக்களில் இடம்பெறும் வெள்ளை நிற பிஸ்டில் இரவு நேரத்தில் நட்சத்திரம் மின்னுவது போல் இருக்கும்
பெட்டூனியா அல்ட்ரா ஸ்டார்
பர்ப்பிள், மஞ்பள், இளஞ்சிவப்பு, வெள்ளை நிற பூக்களை கொண்ட இந்த மலர் செடி இனிமையான நறுமணத்தை கொண்டதாக இருப்பதுடன் உங்கள் வீட்டு தோட்டம் அல்லது மாடி தோட்டத்தில் வளர்க்ககூடிய செடியாக உள்ளது