ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம், சேர்க்கை உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன. அந்த வகையில் உண்டாகும் ஒரு யோகங்களில் ஒன்றாக உதயபானு யோகம் குறிப்பிடப்படுகின்றது.
ஒரு ஜாதகர் உயர்நிலை யோக்கிதை அடைய படிப்படியாக ஒரு மனிதனை அழைத்து சென்று நல்ல பரோபகார சிந்தனை, தெய்வ பக்தி, உடல் ஆரோக்கியம், திடமான மனம், அரசு,பதவி, முன்னேற்றம், புகழ், பொருளாதாரம் ஆகியவற்றை தரும் யோகமாக இந்த உதயபானு யோகம் உள்ளது.
ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னாதிபதியும், ராசி அதிபதியும் உங்கள் ராசியில் உச்சம் ஆக இருக்க வேண்டும் என்பது இந்த யோகத்தின் முதல் விதியாக உள்ளது.
லக்னாதிபதியும், ராசி அதிபதியும் இணைந்த நிலையில், யாரோ ஒருவர் உச்சம் பெற்றால் இந்த யோகம் உண்டாகும்.
ராசி கட்டத்தில் யாரும் உச்சம் பெறவில்லை, ஆனால் நவாம்ச கட்டத்தில் உச்ச வீடுகளில் அமர்ந்து இருந்தாலும் இந்த யோகம் உண்டாகும்.
உதாரணமாக மீன லக்னம், கும்ப ராசியை எடுத்துக் கொள்வோம். மீன லக்னத்தின் அதிபதியாக குரு பகவானும், கும்ப ராசியின் அதிபதியாக சனி பகவானும் உள்ளனர். இவர்கள் இருவரும் உச்சம் பெற்றால் நேரடியாக உதயபானு யோகம் உண்டாகும்.
Siddharth: நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோருக்கு ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர்.