காலபுருஷனுக்கு 12ஆவது ராசியாக உள்ள மீனம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் அதிபதி ஆவர். அடித்தட்டு நிலையில் இருந்து வாழ்கையில் உயர்வை சந்திக்க கூடியவர்கள். இறைபக்தி, சிந்தனை, லட்சியம் ஆகிய எண்ணங்கள் இவர்களின் பலம்.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏழரை சனி பாதிப்புக்குள் மீனம் ராசிக்காரர்கள் உள்ளாகிவிட்டனர். வேலை மற்றும் குடும்பங்களில் பிரச்னை, உடல் உபாதைகள், பயம், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து இருப்பீர்கள்.
ஜென்ம சனி காலகட்டத்தில் உடலில் சோம்பேறித்தனம் உண்டாகும். எடுக்கும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டு இருக்கலாம். கணவன் மனைவி மற்றும் தொழில் கூட்டாளிகள் உடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தேவை இல்லாத போதை பழக்கங்களுக்குக்கு ஆளாகலாம். உங்கள் பெயர், புகழ், பெருமைக்கு ஆபத்து வர நேரிடலாம்.
ராசிக்கு மூன்றாம் வீடான உபஜெய ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் உங்கள் முயற்சிகள் தேக்கம் அடையும்.
ஏழாம் வீட்டை பார்க்கும் போது குடும்பம், தொழில் கூட்டாளிகள் வழியே பிரச்னைகள் உண்டாகும்.
10ஆம் வீட்டை பார்க்கும் போது செய்யும் தொழில்களில் தேக்கமும், சிக்கல்களும், பிரச்னைகளும் உண்டாகும்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறுவில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனி பகவானை வழிபாடு செய்து, நள தீர்த்தத்தில் குளித்து, நல்லெண்ணை தீபம் ஏற்றினால் நன்மைகள் உண்டாகும்.
சனி பகவானின் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிக்கும் போது, தான தர்மங்களை செய்யும் போதும் சனி பகவானின் அருளை பெறலாம். படிக்க முடியாத ஏழை பெண் குழந்தைகளுக்கு முடிந்த உதவிகளை கொடுக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் சிவாலயங்களுக்கு சென்று நல்லெண்ணை தீபம் ஏற்றுவது சிக்கல்களை தீர்க்கும். தெருநாய்களுக்கு தண்ணீர், உணவு அளிப்பது கெட்ட பலன்கள் மாறி நல்ல பலன்கள் கிடைக்கும்.
ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.