விவாகரத்துக்கான முக்கிய காரணங்கள்

By Marimuthu M
Apr 29, 2024

Hindustan Times
Tamil

திருமணத்துக்குப் பிறகு, ஒருவர் உடல் ரீதியிலான தேவைகளுக்காக பிறரிடம் உறவில் இருந்தால் அது விவாகரத்துக்கு வழிவகுக்கும். 

பணத்தை எப்படி செலவிடுவது என்பதில் வரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக தம்பதிகளிடையே 40% விவாகரத்து நடைபெறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 

திருமணத்துக்குப் பின், ஒருவருடன் ஒருவர் மனம் விட்டுப் பேசி, ஒருவரின் கருத்தினை இன்னொருவர் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் விவாகரத்தில் போய் முடிகிறது.

 ஒருவரையொருவர் மதித்து நடத்தல் திருமணத்துக்குப் பின் மிக முக்கியமானது. அதைவிடுத்து ஒருவரின் கருத்தினை இன்னொருவர் எதிர்த்து நிலையான வாக்குவாதம் செய்தல் பிரச்னையை விவாகரத்து வரை கொண்டு போய்விடும்.

திருமணத்துக்குப் பின், உணர்ச்சிப் பூர்வமான நெருக்கத்தை இருவரும் காட்ட வேண்டும். ஒருவரின் பாலியல் தேவைகளை இன்னொருவர் சரியாகப் பூர்த்தி செய்யாவிட்டால் பிரச்னைகள் துவங்குகின்றன

திருமணத்துக்குப் பின், இல்வாழ்க்கைத் துணை பிற திருமாணமானவர்கள் இப்படி உள்ளனர் எனக் கருதி ஒப்பிட்டுக்கொள்வது, கிடைக்காத எதிர்பார்ப்புகளை வைப்பது ஆகியவை விவாகரத்துக்கு வழிவகுக்கும்.

உறவில் ஒருவரையொருவர் சமமாக நடத்த வேண்டும். ஒருவரை இன்னொருவர் அடக்க முயற்சிக்கக் கூடாது. ஒருவரையொருவர் சமமாக நடத்தாத தன்மை விவாகரத்துக்கு வழிவகுக்கும். 

எதிலும் குதிரை போல் செயல்படுவார்கள்! அஸ்வினி நட்சத்திரத்தின் பொது பலன்கள்!