உங்கள் உணவு டயட்டில் காலிபிளவர் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Dec 21, 2024
Hindustan Times Tamil
ஏராளமான ஊட்டச்சதுகள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த காய்கறியாக காலிபிளவர் இருந்து வருகிறது
பன்முக தன்மை கொண்டிருக்கும் இந்த காய்கறி இதய நோய் மற்றும் புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது
அதிகப்படியான நார்ச்சத்து நிரம்பியிருக்கும் காலிபிளவர் குடலில் நல்ல பாக்டீரியா உற்பத்தியை ஊக்குவிக்கிறது. வீக்கத்தை குறைத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
காலிபிளவரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள்,கந்தக ஊட்டச்சத்துகள் மற்றும் குளுகோஸினோலேட்ஸ் நொதிகளை தூண்டுவதன் மூலம் நச்சுக்களை நீக்க உதவுவகிறது
நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் குறைவான கொலஸ்ட்ரால் அளவு இதய நோய் ஆபத்தை குறைக்கிறது. இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுதத்தை சீராக்குகிறது
குறைவான கலோரிகளை கொண்டிருப்பதால் எடை குறைப்புக்கு உதவுகிறது
உடல் ரீதியான பல்வேறு செயல்பாட்டுக்கும், நோய் பாதிப்பு ஏற்படுவதில் இருந்தும் தடுக்க உதவும் சோலிலைன் காலிபிளவரில் அதிகமாக உள்ளது
குறைவான கார்ப்போஹைட்ரேட்கள் கொண்டிருக்கும் காலிபிளவர், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக உள்ளது.
World Saree Day: உலக சேலைகள் தினம் இன்று! காஞ்சி முதல் காசி வரை! சேலைகள் சொல்லும் சேதி…!