இந்த வாரத் துவக்கத்திலேயே சந்திரன் அஷ்டம நிலையில் உள்ளதால் வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி பகல் 3.15ஆம் தேதி வரை உள்ளது. ஏழரை சனி காலத்தில் நாம் செய்யக்கூடிய விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. உடல் சோர்வு, அசதி ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கிய முடிவுகளை சரியான நபர்களுடன் ஆலோசித்து எடுக்க வேண்டும். உடல் நலத்தில் சிறுசிறு பிரச்னைகள் வர வாய்ப்புகள் இருந்தாலும் மிகப்பெரிய பிரச்னைகள் வர வாய்ப்பு இல்லை.
சூரியன் 7ஆம் இடத்தில் உள்ள காரணத்தால் வாழ்கைத் துணையின் உடல் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். ஏதேனும் உடல்நலம் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுவது சிறப்பை ஏற்படுத்தும். தந்தை வழியில் இருந்த குறைபாடுகள் நீங்கி மகிழ்ச்சியை தரும் காலமாக இது விளங்கும்.
ஏழரை சனி வக்ரம் பெற்று உள்ளதால் பேச்சில் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம். கோபமாக பேசுவது பிரச்னைகளை உண்டாக்கும். செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பை கூட்டும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
நிலம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தால் அதில் வெற்றிகள் கிட்டும். அதிக பயணங்கள், அலைச்சல்கள் இருக்கும். பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும் என்பதால் மன அமைதிக்கு தினமும் தியானம் மேற்கொள்வது சிறப்பை தரும். வாழ்கை துணை மூலம் வெற்றிகள் கிடைக்கும். காதலை திருமணமாக மாற்றக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும், பணிச்சுமை காரணமாக பணிகளை சரியான நேரத்தி செய்ய தவறினால் கூடுதல் அலைச்சல் மற்றும் வேலை பளு உண்டாகும்.
உத்ராடம் நட்சத்திரம் மற்றும் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதியும், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் 10ஆம் தேதியும் அனுகூலங்களை ஏற்படுத்தி தரும் நாளாக அமையும்.
ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று ஆடிப்பூரம் அன்று திருப்பாவை கேட்பதும், பாடுவதும் வாழ்வில் சுபத்துவத்தை ஏற்படுத்தும். ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று சதுர்ததி என்பதால் விநாயகர் வழிபாடு தடைகளை தகர்த்து அற்புதங்களை ஏற்படுத்தி தரும். வியாழன் கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்வது, வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி லட்சுமி தயார் வழிபாடு செய்வது நன்மைகளை தரும்.
Siddharth: நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோருக்கு ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர்.