மகரம் ராசிக்கு அடிக்குது ஜாக்பாட்! ஆட்டிப்படைத்த சனி அமைதியாகிறார்! அடுத்த 60 நாட்கள் சூப்பர்!
By Kathiravan V Aug 21, 2024
Hindustan Times Tamil
சூரிய பகவான் செப்டம்பர் மாதத்தில் 8ஆம் வீட்டில் உள்ளார், பின்னர் 9ஆம் வீட்டிற்கு நகரும் போது குரு வக்ரம் அடைகிறார். செவ்வாய் 6 ஆம் வீட்டில் உள்ளனர். புதன் 6 ஆம் வீட்டில் இருந்து 9ஆம் வீடு வரை பெயர்ச்சி ஆக உள்ளார். சுக்கிரன் 9ஆம் வீட்டில் இருந்து 10ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
மகரம் ராசிக்கு 2ஆம் வீட்டில் சனி பகவானும், 3ஆம் வீட்டில் ராகு பகவானும் உள்ளனர். 5ஆம் வீட்டில் குரு பகவானும், 9ஆம் வீட்டில் கேது பகவான் குரு பார்வை பெற்றும் உள்ளனர்.
வரும் செப்டம்பர் மாத காலத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு உடலும், மனதும் வலுப்படும் காலமாக இருக்கும். பேச்சு, செயல், நிர்வாகத் திறமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, மரியாதை மேன்மை பெறும்.
கடன் பிரச்னைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வழக்குகள் சாதகம் ஆகும். புதிய கடன் வாங்க திட்டமிடுபவர்களுக்கு கடன் கிடைக்கும். வாழ்கை போராட்டம் உங்களுக்கு வெற்றியை கொண்டு வரும்.
அக்டோபர் மாதத்தை பெறுத்தவரை 2ஆம் வீட்டில் சனி பகவான் வக்ரம் பெற்று உள்ளார். 3ஆம் வீட்டில் ராகு உள்ளார். அக்டோப்ர் 9ஆம் தேதி அன்று 5ஆம் வீட்டில் உள்ள குரு வக்ரம் அடைகிறார். அக்டோபர் 17ஆம் தேதி வரை சூரியன், கேது உடன் சேர்ந்து உள்ளார். பின்னர் சூரியன் 10ஆம் வீட்டில் நீசம் அடைகிறார்.
உங்கள் உடலும் மனதும் தெளிவாக இருக்கும். உங்களின் பேச்சும், செயல்பாடும் ஆணித் தரமாக இருக்கும். உங்கள் வாழ்கை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும், நீண்ட கால தடைகள் நீங்கும். சொத்து வாங்கும் நிலை உண்டாகும். தொழில் யோகமான காலகட்டமான இந்த காலத்தில் லாபம் அதிகமாக இருக்கும். கூட்டாளிகள் உடன் ஒத்துப்போவது நல்லது. பயணங்கள் மகிழ்ச்சியை தரும்.
தந்தை உடன் பகைமை பாராட்ட வேண்டாம். அரசாங்கத்துடன் விரோதம் கூடாது. யாருடனும் போட்டி மற்றும் சண்டைகளில் ஈடுபடாதீர்கள். கவுரவ பிரச்னையாக எதையும் அனுகாதபட்சத்தில் மிகுந்த நன்மைகளை தரும் மாதமாக இது அமையும்.
’மேஷம் முதல் மீனம் வரை!’ நீச பங்க ராஜயோகம் என்றால் என்ன? நீசம் பெற்ற கிரகம் என்ன செய்யும்?