’மகரம் ராசிக்காரர்கள் கோடிகளை குவிப்பது எப்போது?’ 2, 6, 10, 11ஆம் இடங்கள் சொல்லும் ரகசியம்!

By Kathiravan V
Aug 14, 2024

Hindustan Times
Tamil

மகர லக்னத்திற்கு தனம் வரும் வழிகளுக்கான சூழ்ச்சுங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.ராசி மண்டலத்தின் 10ஆவது ராசியான மகரம், சனி பகவானின் ஆட்சி வீடாகும். இங்கே செவ்வாய் பகவான் உச்சமும், குரு பகவான் நீசமும் அடைகின்றனர். சுக்கிரன், புதன், ராகு, கேது ஆகிய கிரகங்கள் நட்பு பெறுவார்கள். சூரியனும், சந்திரனும் இங்கே பகை பெறுவார்கள். 

இவர்களுக்கு 2, 6, 10, 11ஆம் இடங்களாக கும்பம், மிதுனம், துலாம் மற்றும் விருச்சிகம் ஆகியவை உள்ளது. இதில் கும்பம், மிதுனம், துலாம் ஆகிய ராசிகள் வாயு தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. 

மகரம் ராசிக்கு பணம் வரும் சூழ்ச்சுமங்கள் இதில் ஒளிந்து உள்ளது. கும்பம் ராசிக்கு சனி பகவான், மிதுனம் ராசிக்கு புதன், துலாம் ராசிக்கு சுக்கிரன் ஆகிய மூன்று பேருமே அதிநட்பு கிரகங்களாக உள்ளனர். லாபாதிபதியாக வரும் செவ்வாய் பகவான் மகரத்தில் உச்சம் பெறுகிறார். சுகத்தையும், பாதகத்தையும் சேர்த்தே தரக்கூடியவர் ஆவார். 

2ஆம் இடமான சனி பகவான் வீட்டில் செவ்வாய் பகவானின் அவிட்டம் 3, 4 பாதங்கள், ராகு பகவானின் சதயம் நட்சத்திரத்தின் 4 பாதங்களும், குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தின் 3 பாதங்களும் அடங்கி இருக்கும். 

இதில் செவ்வாய்- சனி இணைப்பு வரும் போது கனரக வாகனங்கள், பொறியியல் அறிவு, எலெக்ட்ரானிக் துறை, மெக்கானிக்கல் துறை உள்ளிட்ட வகைகளில் பொருள் சேர்க்கை ஏற்படும். உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள், வாகனங்களை இயக்குவது, பராமரிப்பது, ரயில்வே துறை, ஜோதிடம், ஆன்மீகம், உளவுத்துறை, ரகசிய காப்பாளர்கள், பணத்தை கொண்டு செய்யப்படும் நகை அடகு வியாபாரம், கட்டுமானம் மற்றும் அது சார்ந்த தொழில்கள், ரியல் எஸ்டேட், இண்டீரியர் டெக்கரேஷன், வெளிநாட்டு தொடர்பு ஆகிய வகைகள் மூலம் செல்வம் சேர்க்க வாய்ப்புகள் உண்டாகும். 

6ஆம் வீடாக வரும் புதன் வீடான மிதுனம் ராசியில் செவ்வாயின் மிருகசிரீடம், ராகுவின் திருவாதிரை, குருவின் புனர்பூசம் நட்சத்திரங்கள் உள்ளன. 

இதில் ஒப்பந்தம் சார்ந்த தொழில்கள், பத்திரப்பதிவு, தரகு வேலைப்பாடுகள், தபால் துறை, போக்குவரத்து துறை, எழுத்து, கதை, காவியங்களை படைப்பது, கமிஷன் ஏஜெண்ட், பயணம் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்கள், ஆசிரியர், கல்வி சார்ந்த தொழில்கள், பதிப்பகம் நடத்துவது, மேலாண்மை பணிகள், நிதி நிர்வாகம் சார்ந்த பணிகள் மூலம் செல்வம் சேர்க்கும் நிலை ஏற்படும். 

கலைத்துறை, அழகு சார்ந்த பொருட்கள், வசதியாக வாழ தேவைப்படும் பொருட்கள் உற்பத்தி, கப்பல் கட்டுதல், இலக்கிய துறை, புகைப்பட துறை, நாட்டியம், கட்டுமானம் ஆகிய துறைகள் மூலம் செல்வம் சேர்க்கும் நிலை ஏற்படும்.  

மறதியைச் சமாளிப்பது எப்படி?