மகரம் ராசிக்கு விலகும் சனி! 30 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் ராஜ வாழ்கை! உச்சத்தில் உட்கார ரெடியா?
By Kathiravan V Nov 05, 2024
Hindustan Times Tamil
ஏழரை சனி பாதிப்பில் உள்ள மகரம் ராசிக்காரர்கள் மிகுந்த சிக்கல்களையும், பிரச்னைகளையும் சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்னைகள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளது. தற்போது கும்பம் ராசியில் உள்ள சனி பகவான் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதனால் கடந்த ஏழரை ஆண்டு காலமாக மகரம் ராசிக்கு நிலவி வந்த ஏழரை சனி பாதிப்பு முழுமையாக விலக உள்ளது.
இதனால் வாழ்கையில் புதிய வாய்ப்புகள், முன்னேற்றங்கள், பதவி உயர்வு, பிரிந்த உறவுகள் சேர்வது உள்ளிட்ட நன்மைகள் கிடைக்க போகின்றது. மகரம் ராசிக்காரர்களின் நேற்றைய அவமானங்கள் இனி வெகுமானங்களாக மாறப்போகின்றது.
மீனம் ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகும் போது ஏற்கெனவே சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் உள்ள நிலையில் ஐந்தாவது ராசியாக சனி பகவான் செல்ல உள்ளார். மீனம் ராசி என்பது மோட்ச ஸ்தானம் என்று காலபுருஷனால் வகைப்படுத்தப்படுகின்றது. இந்த மோட்ச ஸ்தானத்தில் 5 கிரகங்கள் அமர உள்ளது.
ராசிக்கு 3, 6, 11ஆகிய இடங்களில் சனி பகவான் சஞ்சரிக்கும் போது நினைத்து பார்க்க முடியாத ஏற்றங்களையும், செல்வ செழிப்புகளையும் தரும். மகரம் ராசியில் இருந்து 3ஆம் இடமான மீனம் ராசிக்கு சனி பகவான் பெயர்கிறார். இது முயற்சி ஸ்தானம் என்றும், உபஜெய ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகின்றது.
அதே நாளில் சுக்கிரன் மற்றும் குரு ஆகியோர் பரிவர்தனை யோகத்தை பெறுகின்றனர். இந்த கிரக சேர்க்கைகள் அரசு தொடர்பான விவகாரங்கள் அனுகூலங்களை தரும். மனதில் தெளிவான எண்ணங்கள் பிறக்கும். எதிர்மறையான எண்ணங்கள் தோன்றாது. தனகாரகன் ஆன குரு பகவான் உடன் சுக்கிரன் பரிவர்தனை பெறுவதால் திடீர் பணவரவு உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம், சுப செலவுகள், ஆடம்பர வாழ்கை, வெளிநாட்டுத் தொடர்புகள் ஆகியவை உண்டாகும்.
அரசு, அரசியல் சார்ந்து இயங்குபவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு சிறப்பான காலமாக இது இருக்கும். வாழ்கையில் புதிய திருப்பங்கள் உண்டாகும். நீங்கள் கொண்ட வைராக்கியங்கள் வெற்றி பெறும் காலம் உண்டாகும். திருமணம் ஆகாத மகரம் ராசிக்காரர்களுக்கு திருமணம் ஆகும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வீர்கள். பணியிடத்தில் தள்ளி போன பதவி உயர்வு கிடைக்கும்.
செவ்வாய் பகவான் ராசிக்கு 6ஆம் இடத்தில் மறைகிறார். 5ஆம் இடத்தில் உள்ள குரு பகவான் உங்கள் ராசியை பார்க்கிறார். குரு பார்வை நன்மையை கொண்டு வரும் என்பதால் உங்கள் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.