'அக்டோபரில் வக்ரம் பெறும் குரு!' அசைக்க முடியாத உச்சம் பெறும் மகரம்! இனி நாமதான்!
By Kathiravan V Oct 01, 2024
Hindustan Times Tamil
மகரம் ராசியினருக்கு வரும் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரை 119 நாட்கள் உங்கள் வாழ்க்கையில் அற்புதமான காலங்கள் வர உள்ளது.
சனி பகவான் வக்ரம் பெற்று உள்ள நிலையில் குரு பகவானும் வக்ரம் பெறுகிறார். மகரத்திற்கு ஐந்தாம் வீட்டில் இருக்கக்கூடிய குரு நிறைய சுப பலன்களை இப்பொழுதுதான் தர ஆரம்பித்திருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களாக குடும்பம், தொழில், கணவன் மனைவி உறவுகளில் பிரச்னைகள் இருந்து இருக்கும்.
குரு பகவான் நேர்கதியில் செல்லும் போது தரும் நன்மைகளை விட வக்ரம் பெற்ற காலத்தில் தரும் நன்மைகள் அதிகம் ஆக இருக்கும். மகரம் ராசிக்கு 3, 12ஆம் இடங்களுக்கு அதிபதியான குரு பகவானின் பார்வைக்கு பலம் உண்டு.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். திடீர் தனயோகம் உண்டாகும் அரசு ஆதரவு கிடைக்கும். மந்திரிக்கு சமமான பதவி கிடைக்கும். தூர பிரதேசம் தேச வாசம் செய்வீர்கள். ஞானிகளுக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்புகளும் திருப்பணி செய்யக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும்.
குரு பகவான் மகரம் ராசியை பார்ப்பதால் ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்கள் உண்டாகும். தேக பலம் கூடும். வயிறு சம்பந்தப்பட்ட உபத்திரங்கள் நீங்கும்.எடுத்த காரியத்தல் ஜெயம் ஏற்படும். 11 ஆம் வீட்டையும் குருபகவான் பார்க்கிறார் என்பதால் குடும்பத்தில் வெற்றி உண்டாகும்.
மகிழ்ச்சி உண்டாகும் தாயிடத்தில் அன்பு கூடும். நஷ்டமான பொருள் மீண்டும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பார்.
பலவிதமான வகைகளில் லாபங்கள் உண்டாகும். சங்கீதம் நடனம் சம்பந்தப்பட்ட துறையில் தொழில் உள்ளவர்கள் பெரும் வெற்றி அடைவார்கள். பெரிய மனிதர்களுடைய நட்பு சகவாசம் உண்டாகும்.
9ஆம் இடத்தை அவர் பார்ப்பதால் வெளிநாடு, வெளிமாநிலம், வேறு மொழி பேசுபவர்கள் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். தெய்வ பக்தி கூடும். நட்புக்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். முற்பிறவியில் செய்த புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
தினமும் கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்