Enter teடயபிடிஸை நிர்வகிக்க உதவும் குறைவான சர்க்கரை அளவு கொண்ட பழங்கள் எவை என்பதை பார்க்கலாம்xt Here
By Muthu Vinayagam Kosalairaman Apr 04, 2024
Hindustan Times Tamil
ஸ்ட்ராபெர்ரி குறைவான சர்க்கரை அளவு கொண்ட பழமாக இருந்து வருகிறது. வைட்டமின் சி நிறைந்திருக்கும் இந்த பழத்தை டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்கள் தினமும் சாப்பிடலாம்
மற்றொரு வைட்டமின் சி நிறைந்த பழமாக இருக்கும் எலுமிச்சையில் குறைவான சர்க்கரை அளவு உள்ளது. தண்ணீருடன் கலந்து இதை சாப்பிடலாம்
கோடை காலத்தில் அதிகமாக கிடைக்ககூடிய தர்ப்பூசணி பழங்களில் குறைவான சர்க்கரை அளவு இருக்கிறது. ஒரு கப் அளவில் 10 கிராம் அளவுதான் இதில் சர்க்கரை இருப்பதாக கூறப்படுகிறது. உடலுக்கு தேவையான எலெக்ட்ரோலைட்கள், வைட்டமின் ஏ, சி சத்துகளையும் தருகிறது
இனிப்பு சுவை மிக்கதாக இருக்கும் ஒரு பீச் பழத்தில் 13 கிராம் அளவில் தான் சர்க்கரை உள்ளது
குறைவான சர்க்கரை அளவுடன், குறைவான கலோரிக்கள் கொண்ட பழமாக ஆரஞ்சு இருந்து வருகிறது. வைட்டமின் சி நிறைந்திருக்கும் இதில் 14 கிராம் அளவு சர்க்கரையும், 77 கலோரிகளும் நிறைந்திருக்கின்றன
வைட்டமின் ஏ நிறைந்திருக்கும் க்ரினி பழத்தில் 13 கிராம் அளவு சர்க்கரை உள்ளது. சோடா போன்ற சர்க்கரை மிக்க பானங்களுக்கு சிறந்த மாற்றாக இந்த பழத்தின் ஜூஸ் இருக்கும்
வெறும் 1 கிராம் அளவில் தான் சர்க்கரை இடம்பிடித்திருக்கும் பழமாக அவகோடா இருந்து வருகிறது. ஆரோக்கிய கொழுப்புகள் கொண்டிருக்கும் இந்த பழம் பசி உணர்வை குறைக்கிறது
கலப்பின பழமாக இருந்து வரும் கிரேப் ஃபுருட், மற்ற திராட்சை பழங்களை விட இனிப்பாக இருந்தாலும் இதன் அரை பழத்தில் 10.6 கிராம் அளவுதான் சர்க்கரை உள்ளது. ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவாக இது உள்ளது
வைட்டமின் சி இருக்கும் கிவி பழம் 6.7 கிராம் அளவுதான் சர்க்கரை உள்ளது. ஆண்டு முழுவதும் கிடைக்ககூடிய பழமாக உள்ளது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துகளுடன் ஊட்டச்சத்து மிக்க பழமாக இருந்து வரும் பிளாக்பெர்ரி ஒரு கப்பில் 7 கிராம் அளவு சர்க்கரை அளவு நிறைந்துள்ளது
தினமும் சத்தான மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் முத்தான பலன்கள் இதோ!