உடல் எடை குறைக்க விரும்புவோருக்கான குறைவான கலோரிகள் கொண்ட இரவு டின்னர் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Mar 27, 2024

Hindustan Times
Tamil

குறைவான கலோரிகளுடன் கூடிய குறைந்த அளவில் டின்னர் சாப்பிடுவது எடை குறைப்புக்கு வழிவகுக்கும்

கோழி மார்பு பகுதி

காய்கறிகளுடன் கோழி மார்பு பகுதியை இரவு டின்னராக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான கார்ப்போஹைட்ரேட்கள், மெலிதான புரதம், வைட்டமின்கள் போன்றவை கிடைக்கும். அத்துடன் எடை குறைப்புக்கும் உதவும்

ஓட்மீல்

ஒரு பவுல் ஓட் மீல் விதைகள், நட்ஸ், பழங்கள் ஆகியவற்றுடன் சாப்பிடுவதன் மூலம் வயிறு நிரம்பிய உணர்வை தருவதோடு, எடை குறைப்புக்கும் உதவுகிறது

கொண்டகடலை

மெலிந்த புரதம் மற்றும் வைட்டமின்கள் கொண்டிருக்கும் கொண்டகடலை எடை குறைக்க விரும்புவோருக்கான சிறந்த சாய்ஸாக உள்ளது. சாப்பாத்தியுடன் சேர்த்து இந்த கொண்டகடலையை சாப்பிடலாம்

காய்கறி சாலட்

கீரை, பட்டாணி, ப்ரோக்கோலி, கேரட் போன்ற காய்கறி வகைகளை வேக வைத்து  ஒரு பவுலில் சாலட் ஆக மாற்றி சாப்பிடலாம்

கிச்சடி

பருப்பு, காய்கறிகள், பிரவுன் அரிச வகைகளை வைத்து தயார் செய்யப்படும் கிச்சடி சிறந்த இரவு உணவாகவும், எடை குறைப்புக்கான சிறந்த சாய்ஸாகவும் உள்ளது

உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்